பக்கம் எண் :

1366
 
1057.வானந் துளங்கிலென் மண்கம்ப மாகிலென்

மால்வரையும்

தானந் துளங்கித் தலைதடு மாறிலென்

தண்கடலும்

மீனம் படிலென் விரிசுடர் வீழிலென்

வேலைநஞ்சுண்

டூனமொன் றில்லா வொருவனுக் காட்பட்ட

வுத்தமர்க்கே.

8


மாலுடைய உடலையும் சுமந்து கொண்டு அவர்களுடைய தசைகழிந்த உடம்பின் எலும்புக் கூடுகளை அணிந்தவனாய், ஒடுங்கிய உலகம் மீளத்தோன்றும் முறைமையின் சங்கற்பம் செய்து கொண்டு இருந்து எம்பெருமான் சிறந்த வீணையை வாசித்துக் கொண்டிருப்பான்.

கு-ரை: பெருங்கடல் மூடிப் பிரளயம்கொண்டு - பெரிய கடலாற் சூழப்பட்டுப் பிரளயம் உற்று பிரமனும் போய் - படைத்தற் றொழிலானாகிய பிரமனும் சென்று; இருங்கடன் மூடி - தன் பெரிய கடன்மை முடிந்து; இறக்கும் - மாள்வான். இறந்தான் களேபரமும் - இறந்த அவனது உடலையும்; கருங்கடல் வண்ணன் களேபரமும் - கரிய கடலினது நிறம்போலும் நீலநிறமுடைய திருமாலினுடலையும்; கொண்டு - கைக்கொண்டு. கங்காளர் ஆய் - கங்காளத்தினை மேற் கொண்டவராகி. மீளவரும் கடன் நின்று - ஒடுங்கிய உலகம் மீளத் தோன்றும் முறைமையின் சங்கற்பம் செய்து; எம் இறை - எம் இறைவன். நல்வீணை வாசிக்கும் - அழகிய வீணையை இயம்பும். வீணைக்கு நலம் - சுருதியியல் கெடாதவாறமைந்து, இன்னிசைத் தோற்றத்துக்குரியதாதல். ‘பண்ணொடுயாழ் வீணை பயின்றாய் போற்றி’ (தி.6 ப.57 பா.7) ‘கங்காள வேடக்கருத்தர்’ (தி.6 ப.28 பா.7) ‘கரியுரித்தாடு கங்காளர்’ (தி.3 ப.93 பா.6) ‘கங்காளன் பூசுங் கவசத் திருநீறு’ (தி.10 திருமந்திரம்) - உடல். மகேசுரமூர்த்தத் தொன்று.

8. பொ-ரை: கடலில் எழுந்தவிடத்தை உண்டும் எந்தக்குறைபாடும் இல்லாத ஒப்பற்ற சிவபெருமானுக்கு அடிமைகளாய்த் தொண்டு செய்யும் மேம்பட்டவர்களுக்கு, வானமும் மண்ணும் அசைந்து ஒடுங்கினாலும், பெரிய மலைகள் இடம் பெயர்ந்து மேல் கீழாகத் தடுமாறினாலும், கடல்களிலுள்ள நீர்வாழ் உயிரினங்கள் அழிந்தாலும், சூரிய சந்திரர்கள் இடம் பெயர்ந்து விழுந்தாலும் அவற்றைப்