பக்கம் எண் :

1367
 
1058.சிவனெனு நாமந் தனக்கே யுடையசெம்

மேனியெம்மான்

அவனெனை யாட்கொண் டளித்திடு மாகி

லவன்றனையான்

பவனெனு நாமம் பிடித்துத் திரிந்துபன்

னாளழைத்தால்

இவனெனைப் பன்னா ளழைப்பொழி யானென்

றெதிர்ப்படுமே.

9


பற்றிய கவலை ஏதும் ஏற்படாது.

கு-ரை: வேலைநஞ்சு உண்டு ஊனம் ஒன்று இல்லாத ஒருவனுக்கு ஆட்பட்ட உத்தமர்க்கு, வானம் துளங்கில் என்? மண் கம்பம் ஆகில் என்? ‘மால்வரையும் தானம் துளங்கித் தலைதடுமாறில் என்? தண் கடலும் மீனம்படில் என்? விரிசுடர் வீழில் என்? என்று கொள்க. வானம் - விண்ணுலகம். துளங்கில் - அசைந்தால். என் - நமக்குறும் அச்சம் யாது? நமக்கு அதனால் சிறிதும் இடர் இல்லை. மண்ணுலகு, கம்பம் - நடுக்கம்; (பூகம்பம், நிலநடுக்கம்). மால்வரையும் தண்கடலும் முறையோ தானம் துளங்கித், தலைதடுமாறிலும் (நீர்வற்றி) மீன்கள் பட்டொழியிலும் நமக்கு யாதும் இடர்ப்பாடு இல்லை. மால்வரை - பெரிய மலைகள். தானம் - இடம். துளங்கி - பெயர்ந்து. தலை தடுமாறல் - நிலைகெடல். தண்கடலாயிருந்து வறுங்கடலாங்கால், அதில் உள்ள மீன் முதலியன எல்லாம் மாயும். படில் - மாய்ந்தால், விரிசுடர் - உலகெலாம் விரிந்த சுடருடைய செங்கதிர் வெண்கதிர் முதலியவை. வீழில் - விழுந்தால். தப்பி வானம் தரணி கம்பிக்கில் என்? ஒப்பில் வேந்தர் ஒருங்குடன் சீறில் என்? செப்பம் ஆகும். சேறைச் செந்நெறி மேவிய அப்பனார் உளர் அஞ்சுவ தென்னுக்கே.’ (தி.5 ப.77 பா.6.)

9. பொ-ரை: சிவன் என்ற பெயரைத் தனக்கே உரிய பெயராகக் கொண்ட செம்மேனிப் பெருமான் அடியேனை அடிமையாகக் கொண்டு கருணை செய்திடுவானாகில் அவனை அடியேன் ‘பவன்’ என்னும் திருப்பெயர் முதலியவற்றை உள்ளத்திலும் சொல்லிலும் பற்றி அவன் அடியேனை இயக்கும் இடம் தொறும் திரிந்து பலநாளும் அழைத்தால், இவன் என்னை பலநாளாக அழைத்தலைத் தவறாது செய்கிறான் என்று திருவுள்ளம் பற்றி அடியேற்குக் காட்சி வழங்குவான்.