பக்கம் எண் :

1368
 
1059.என்னையொப் பாருன்னை யெங்ஙனங் காண்ப

ரிகலியுன்னை

நின்னையொப் பார்நின்னைக் காணும் படித்தன்று

நின்பெருமை

பொன்னையொப் பாரித் தழலை வளாவிச்செம்

மானஞ்செற்று

மின்னையொப் பார மிளிருஞ் சடைக்கற்றை

வேதியனே.

10

திருச்சிற்றம்பலம்


கு-ரை: சிவன் என்னும் திருப்பெயரைத் தன் ஒருவனுக்கே யுரியதாக்கிக் கொண்ட செய்ய திருமேனியையுடைய எம்பெருமானாகிய அவன் என்னை ஆளாகக் கொண்டு. தண்ணளிசெய்தருள்வான். அளித்திடும் ஆகில், அவனை, அடியேன், ‘பவன்’ என்னும் திருப் பெயர்ப் பொருள் முதலியவற்றை உள்ளத்திலும் உரையிலும் பற்றி, (அவன் இயக்கும் இடந்தொறும்) இயங்கிப் பலநாளும் அத்திருப்பெயரால் அழைத்துவந்தால், இவன் என்னைப் பலநாளும் அழைத்துவருகின்றான். அழைத்தலை ஒழிவதில்லை என்று அடியேற்குக் காட்சிதந்தருள்வான். சிவன் - செய்யன். தமிழ்ச் சொல்லாகக் கொண்டு பொருள்கூறிய இடம் இது. செம்மேனி யெம்மான் என்றது ‘சிவன்! என்ற தமிழ்ச் சொல்லின் பொருளாகும். சிவன், மகேசுரன், உருத்திரன், விண்டு, பிதாமகன், சமுசாரவைத்தியன், சருவஞ்ஞன், பரமாத்துமா என்னும் திருப்பெயர் எட்டுடன் ‘பவன் முதலாம் ஆயிரம் பேர் எடுத்துக்கூறிக் குறையாத பேரன்பிற் பதும மலர்கொடு பூசை புரியும்.’ (காஞ்சிப். திருமாற்பேற்றுப். 9). ‘அகில நாமமும் எமக்குரிப் பெயராம் அவற்றினும் பவன் முதற்பெயர் சிறப்பாத் தகும்’ (காஞ்சிப். திருவேகம்பப். 43) ஆகில் - அன்புடையேம். ஆகில். அழைத்தால் நம் விடாப்பிடிக்காக எதிர்ப்பட்டருள்வான். (தி.8 திருவாசகம் திருச்சதகம். 58.) முதலடி பரத்துவம் உணர்த்தியதுணர்க.

10. பொ-ரை: பொன்னை ஒத்து ஒளியுடையதாய், தீயை ஒத்துச் செந்நிறத்ததாய்ச் சிவந்த வானத்தைப் பிளந்து நெடுகப் பரவியதாய மின்னலை ஒத்து விட்டு விட்டு ஒளிவீசும் சடைக்கற்றையை உடைய வேதப்பரம்பொருளே! அடியேனை ஒத்த சிற்றறிவினர் உன்னை யாங்ஙனம் காண இயலும்? உன்னோடு மாறுபட்டு உன்னை ஒப்பவராகத் தம்மைக் கருதிக்கொள்ளும் தேவர்கள் உன்னுடைய அடியையோ முடியையோ காண இயலாதவாறு உன்பெருமை ஏனைய