எல்லாத் தேவர்களையும் விட மேம்பட்டுள்ளது. கு-ரை: பொன்னை ஒத்து, நெருப்பைக் கலந்து, செம்மானத்தை அழித்து, மின்னலை ஒத்தல் பொருந்த மிளிர்கின்ற சடைத்திரளையுடைய வேதமுதல்வனே, உன்னை இகலி, என்னை ஒப்பவர் எங்ஙனம் உன்னைக் காண்பர், நின்னை ஒப்பவர் நின்னைக் காணும் படியினது அன்று நின்பெருமை. உன்னை இகலி என்றதை முன் வாக்கியத்திலும், நின்பெருமை என்றதைப் பின்வாக்கியத்திலும் கொண்டுரைக்க. என்னை ஒப்பார் உன்னை இகலி உன்னை எங்ஙனம் காண்பர்? நின்பெருமை நின்னைக் காணும்படித்து அன்று, படித்து - தன்மைத்து, படி - தன்மை. பெருமை காணும்படித்து அன்று. ‘அவரன்ன ஒப்பாரியாம் கண்டதில்’ (குறள் 1071) என்றது ஒப்பு. ஒப்பாரித்தல் - அழுவித்தல்; வளாவுதல் - கலத்தல், தணித்தலுமாம். வெந்நீர் வளாவுதல்’என்னும் வழக்கு நோக்கியும் உணர்க. செம்மானஞ் செற்று:- ‘செம்மான நிறம் போல்வதோர் சிந்தையுள் எம்மானைக்கண்டு கொண்டது என் உள்ளம்.’ (தி.5 ப.98 பா.4) ‘சிந்தையாய் நின்ற சிவனே போற்றி’ (தி.6 ப.5 பா.9). செவ்வானம் செம்மானம் எனத் திரியலாம். வவ்வும் மவ்வும் ஒன்றன் நிலைக்களத்து மற்றொன்று நிற்பன. ‘வான மாரி’ என்பது ‘மான வாரி’ என்றதறிக. ‘சடைக்கற்றையினாய்’ (தி.4 ப.112 பா.2). ‘நின்னை’ என்றிருமுறையும் ‘உன்னை’ என்றொருமுறையும் நிற்றலின் பொருத்தம் ஆராய்தற்குரியது. திருத்தொண்டர் திருவந்தாதி | நற்றவன் நல்லூர்ச் சிவன்திருப் பாதந்தன் சென்னிவைக்கப் பெற்றவன் மற்றிப் பிறப்பற வீரட்டர் பெய்கழற்றாள் உற்றவன் உற்ற விடம்அடை யார்இட ஒள்ளமுதாத் துற்றவன் ஆமூரில் நாவுக் கரசெனுந் தூமணியே. |
மணியினை மாமறைக் காட்டு மருந்தினை வண்மொழியால் திணியன நீள்கத வந்திறப் பித்தன தெண்கடலிற் பிணியன கன்மிதப் பித்தன சைவப் பெருநெறிக்கே அணியன நாவுக் கரையர் பிரான்றன் அருந்தமிழே. | - நம்பியாண்டார் நம்பி. |
|