பக்கம் எண் :

1370
 

113. பொது

பதிக வரலாறு:

பூம்புகலூர் வந்தணைந்தார் பொய்ப் பாசம் போக்குவார்: புனிதர் மலர்த்தாள் வணங்கினார். எண்ணிறந்த வண்டமிழ் மாலைகள் பாடினார். அவற்றுள் ஒன்று இத்திருப்பதிகம். (தி.12 பெரிய புராணம், 412 - 15).

தனித் திருவிருத்தம்

பதிக எண்:113

திருச்சிற்றம்பலம்

1060. பவளத் தடவரை போலுந்திண் டோள்களத்

தோண்மிசையே

பவளக் குழைதழைத் தாலொக்கும் பல்சடை

யச்சடைமேல்

பவளக் கொழுந்தன்ன பைம்முக நாகமந்

நாகத்தொடும்

பவளக்கண் வால மதியெந்தை சூடும்

பனிமலரே.

1


1. பொ-ரை: எம்பெருமானுக்குத் திண்ணிய தோள்கள் பெரிய பவளமலைகள் போலவும், தோள்களில் படியும் சடைக்கற்றைகள் பவளத்தின் தளிர்கள் போலவும், சடைமேல் உள்ள படமெடுக்கும் தலையை உடைய நாகம் பவளக் கொழுந்து போலவும், நாகத்தொடு சூடப்பட்ட இளம்பிறை பவளத்தின் குளிர்ந்த மலர் போலவும் காட்சி வழங்குகின்றன.

கு-ரை: திண்தோள்கள் பவளத் தடவரையைப் போலும். பல்சடை அத் தோள்மிசையே பவளக்குழை தழைத்தால் போலும். பைம் முகநாகம் அச்சடைமேல் பவளக்கொழுந்து போலும். பவளக்கண் வாலமதி அந்நாகத்தொடும் எந்தை சூடும் பனிமலர் (போலும்) என்று சொல்வகை செய்துகொள்க. தடவரை - பெரிய மலை. திண்மை - உறுதி; செறிவு. மிசை - மேல். குழை - குண்டலம். பை - படம். பைம்முகம் - படத்தையுடைய முகம். நாகம் - (ஐந்தலைப்) பாம்பு. வாலமதி - பாலசந்திரன்; இளம்பிறை. ‘வால’ என்றது பால என்றதன் திரிபு. அது