1061. | முருகார் நறுமல ரிண்டை தழுவிவண் | | டேமுரலும் | | பெருகா றடைசடைக் கற்றையி னாய்பிணி | | மேய்ந்திருந்த | | இருகாற் குரம்பை யிதுநா னுடைய | | திதுபிரிந்தால் | | தருவா யெனக்குன் றிருவடிக் கீழொர் | | தலைமறைவே. | | 2 |
வடசொல் ‘எந்தை’ - என் அப்பன். இதுதன்மை. ‘நுந்தை’ முன்னிலை. ‘தந்தை’ படர்க்கை. பனிமலர் - குளிர்பூ. தோளுக்குப் பவளவரையும், சடைக்குத் தழைத்த பவளக்குழையும், நாகத்துக்குப் பவளக்கொழுந்தும், பாலசந்திரனுக்குப் பவளத்தின் பூவும் உவமையாகக் கூறப்பட்டன. ‘கற்பகத்தின் பூங்கொம்போ காமன்றன் பெருவாழ்வோ, பொற்புடைய புண்ணியத்தின் புண்ணியமோ, புயல் சுமந்த அற்புதமோ, விற்குவளை பவளமலர் மதிபூத்த விரைக்கொடியோ ... சிவனருளோ அறியேன் என்றதிசயித்தார்.’ (தி.12 பெரிய புராணம். தடுத்தாட்கொண்ட. 140) என்றதாற் பவளமலர் உண்மை அறியப்படும். (தி.4 ப.99 பா.2.) பார்க்க. 2. பொ-ரை: நறுமணம் கமழும் பூக்களாலாகிய இண்டை மாலையைச் சூடி வண்டுகள் ஒலிக்க, பெருகுகின்ற கங்கை ஆறு வந்து பொருந்தியுள்ள சடைக் கற்றையை உடையவனே! பிணிகளால் உண்ணப் பட்டுக் கிடக்கும் இரு தூண்களாகிய இருகால்களை உடைய அடியேன் உடம்பாகிய குடிசை நீங்கினால் அடியேனுக்கு உன் திருவடிக் கீழ்த் தலைமறைவாய் இருக்க இருப்பிடம் அருளுவாயாக. கு-ரை: முருகு - மணம். ஆர். ஆர்ந்த; நிறைந்த. நறுமலர் - நறிய பூ. இண்டை - இண்டை என்னும் பெயரிய தலையிற் சூடும் வட்ட மாலை தி.4 ப.38 பா.4 குறிப்பிற் காண்க. தழுவி - பொருந்தி. வண்டே - வண்டுகளே. முரலும் - ஒலிக்கின்ற (சடை). முரல்வன வண்டுகள். முரலும் இளம் சடை. பெருகுவது ஆறு (கங்கை). அவ்வாறு அடைவது சடையை. சடைக்கற்றையினை யுடையவனே என்று அழைத்து, உன் திருவடிக்கீழ் ஒரு தலைமறைவு எனக்குத் தருவாய் என்றும், அதுவும் இவ்வுடலின் நீங்கும் போது தருவாய் என்றும் வரம் வேண்டுகின்றார். பிணிமேய்ந்திருந்த குரம்பை. இருகால் குரம்பை. பிணியையே கூரையாக வேயப்பட்டிருந்த குடிசை. இரண்டுகால் நட்டுக் கட்டிய
|