பக்கம் எண் :

1372
 
1062.மூவா வுருவத்து முக்கண் முதல்வமீக்

கூரிடும்பை

காவா யெனக்கடை தூங்கு மணியைக்கை

யாலமரர்

நாவா யசைத்த வொலியொலி மாறிய

தில்லையப்பால்

தீவா யெரிந்து பொடியாய்க் கழிந்த

திரிபுரமே.

3


குடிசை. பிணி மேய்ந்திருந்த இருகாற் குரம்பையாகிய இது. நான் உடையது இது. இக்குரம்பை, பிரிந்தால்:- கூடிய நான் நீங்க, இது பிரிந்தால். எனக்கு உன் திருவடிக்கீழ் ஒர்தலை மறைவு தருவாய். தலை மறைவு:- ‘மாயவன் முந்நீர்த் துயின்றவன் அன்று மருதிடையே போயவன் காணாத பூங்கழல் நல்ல புலத்தினர் நெஞ்சேயவன் சிற்றம்பலத்துள் நின்றாடுங் கழல் எவர்க்குந் தாயவன்றன் பொற்கழல் என் தலைமறை நன்னிழலே’ (தி.11 நம்பியாண்டார் நம்பி அருளிய கோயிற்றிருப் பண்ணியர் திருவிருத்தம். 9). குடில் செய் - குடிசை. நன்செய் - நஞ்சை. புன்செய் - புஞ்சை முதலியன போன்ற மரூஉ. குற்றில் - குறில் - குடில். குடியில் செய்யுமாம்.

3. பொ-ரை: என்னும் மூத்தல் இல்லாத வடிவத்தை உடைய முக்கண்ணனாகிய காரணனே! மிகுந்த துயரிலிருந்து எங்களைக் காப்பாற்றுவாயாக என்று உன் இருப்பிடத்தின் வாசலில் தொங்கும் மணியைத் தேவர்கள் கையால் அதன் நாவில் அசைத்து எழுப்பிய ஒலி குறைந்து அழியுமுன் திரிபுரங்கள் நெருப்பில் எரிந்து சாம்பற் பொடியாய்ப் போய்விட்டன.

கு-ரை: மூவா உருவத்து முக்கண் முதல்வ - மூத்தல் இல்லாத அருளுருவையுடைய முக்கண்ணனாகிய முதல்வனே. முக்கண் - அருளுருவத்தில் ஒரு நிலையில் இச்சாசத்தி, ஞானசத்தி, கிரியாசத்தி மூன்றும் கண்களாகும். மீக்கூர்தல் - மிகப் பெருகுதல். இடும்பை - துன்பம். காவாய் - காத்தருள்வாய்; என - என்று, கடைதூங்கும் மணியை - வாயிற் கடையில் அசையும் (ஆராய்ச்சி) மணியை. அமரர் - தேவர்கள். கையால் நாவாய் அசைத்த ஒலி - தங்கள் கைகளால், அம்மணி நாக்கிடத்தில் அசையக்செய்ததால் உண்டான ஒலியானது, அசைத்த ஒலி:- காரணப்பெயரெச்சம். ஒலி மாறியது இல்லை - ஒலித்தலின் மாறினதில்லை. ஒலிஒலி (- ஒலித்த ஒலி) என வினைத்