பக்கம் எண் :

1373
 
1063.பந்தித்த பாவங்க ளம்மையிற் செய்தன

விம்மைவந்து

சந்தித்த பின்னைச் சமழ்ப்பதென் னேவந்

தமரர்முன்னாள்

முந்திச் செழுமல ரிட்டு முடிதாழ்த்

தடிவணங்கும்

நந்திக்கு முந்துற வாட்செய்கி லாவிட்ட

நன்னெஞ்சமே.

4


தொகையாக்கல் பொருந்தாது. அப்பால் - ஒலித்த அப்பொழுதே; பால் எனக் காலம் இடமாயிற்று. பால் உருபன்று. திரிபுரம் இருந்த அவ்விடத்தில். தீவாய் - தீயின்கண். ‘தீயாய்’ (பா.பே) எரிந்து - நெருப்பாகித் தீய்ந்து, பொடியாய் - சாம்பலாகி, (கழிந்தது). நாவாய் - நாவின் கண். நா மணிநா, ‘மிகுகூர்’ மரூஉ. ‘மிக்கூர்’ மிக்கு ஊர்கின்ற என்றுமாம். ‘மிசைமிசை’ என்றது மீமிசை என மருவிய போல்வது, மிகல் - மேல். மிசைக் கண் - மீக்கண், மிசைத்தோல் - மீத்தோல், மீந்தோல், மீசைப் போர்வை - மீப்போர்வை முதலியனவும் அறியற்பாலன.

4. பொ-ரை: வந்து தேவர்கள் சந்நிதிக்கு முன் எய்திச் சிறந்த பூக்களைச் சமர்ப்பித்துத் தலையைத் தாழ்த்தித் திருவடிகளில் விழுந்து வணங்கும் சிவபெருமான் பக்கல் அடிமை செய்யாது நாளைப் பாழாக்கின நல்ல நெஞ்சமே! சென்ற பிறப்பில் செய்தனவாய் நம்மை விடாது பிணித்த பாவங்கள் இம்மையில் வந்து நமக்குப் பாவப் பயன்களை நல்கும் இந்நேரத்தில் அவை குறித்து வருந்துவதனால் பயன் யாது?

கு-ரை: அமரர் முன்னாள், முந்திச் செழுமலர் இட்டு முடியைத் தாழ்த்து அடியை வணங்கும் (அத்தகு முதன்மை யுடைய) நந்தியாகிய சிவபிரானுக்கு நீயே முந்துறும் வண்ணம் தொண்டு செய்யது விட்டனை; அக்கேடுற்ற மனமே’ முற்பிறவி யிற் செய்தனவாய்க் கட்டாயுற்ற தீவினைமறங்கள் இப் பிறவியில் வந்து தாக்கியபின்னர், நாணி வருந்துவதில் யாது பயன்? நன்னெஞ்சம் (நல் + நெஞ்சம்) என்றதில் நன்மை இகழ்ச்சிக் குறிப்பு. அம்மை - முற்பிறப்பு. இம்மை - இப்பிறப்பு. வரும் பிறப்பை ‘உம்மை என்பர். ‘தம்மை இகழ்ந்தமை தாம் பொறுப்பதன்றி மற்று எம்மை இகழ்ந்த வினைப்பயத்தால் உம்மை எரிவாய் நிரயத்து வீழ்வர் கெல் என்று பரிவதூஉம் சான்றோர் கடன்’ (நாலடியார்) என்றதில், ‘உம்மை’ என்றது இனி எய்தும் பிறவியைக் குறித்தது அறிக. ‘அம்மை’ என்றது சேய்மைச் சுட்டுச் சொல் லாதலின்,