பக்கம் எண் :

1374
 
1064. 1அந்திவட் டத்திளங் கண்ணிய னாறமர்

செஞ்சடையான்

புந்திவட் டத்திடைப் புக்குநின் றானையும்

பொய்யென்பனோ

சந்திவட் டச்சடைக் கற்றை யலம்பச்

சிறிதலர்ந்த

நந்திவட் டத்தொடு கொன்றைவ ளாவிய

நம்பனையே.

5


1065.உன்மத் தகமலர் சூடி யுலகந்

தொழச்சுடலைப்

பன்மத் தகங்கொண்டு பல்கடை தோறும்

பலிதிரிவான்


அது முற்பிறவிக்கும் பிற்பிறவிக்கும் உரித்தாகும். ஆதலின், ‘அம்மையே சிவலோகம் ஆள்வதற்கு யாதும் ஐயுறவில்லையே’ என்றருளினார் எம்மையும் ஆளுடைய நம்பி. அதில் ஆள்வதற்கு ஆதும் எனக்கொள்ளவும் இடம் உண்டு. யாது என்றது ஆது என்று வந்துளது. ‘ஆதும் சுவடுபடாமல் ஐயாறடைகின்றபோது’ (தி.4 ப.3 பா.1) என்றதன் குறிப்பிற் காண்க.

5. 1குறிப்பு.

அந்திவட் டத்திளங் கண்ணிய னையா றமர்ந்துவந்தென்
புந்திவட் டத்திடைப் புக்குநின் றானையும் பொய்யென்பனோ
சிந்திவட் டச்சடைக் கற்றை யலம்பச் சிறிதலர்ந்த
நந்திவட் டத்தொடு கொன்றைவ ளாவிய நம்பனையே.

(தி.4 ப.98 பா.1)

1இது முன்னர்த் திருவையாற்றுத் திருவிருத்தம் இரண்டினுள் ஒன்றாய் முதலில் உளது. ‘ஐயாறமர்ந்து வந்தென்’ ‘ஆறமர் செஞ்சடையான்’ என்னும் வேறுபாடு மட்டும் கொண்டது. ‘சிந்தி’ என்பது சந்தி எனப் பிழைபட்டது. அதுவே அன்றி, இது வேறுபாடல் ஆகாது. ‘இளங்கண்ணி’ எனல் பொருந்தாது.

6. பொ-ரை: தன் தலையிலே ஓர் இளம் பிறையைச் சூடிய