பக்கம் எண் :

1375
 
என்மத் தகத்தே யிரவும் பகலும்

பிரிவரியான்

தன்மத் தகத்தொ ரிளம்பிறை சூடிய

சங்கரனே.

6


1066.அரைப்பா லுடுப்பன கோவணச் சின்னங்க

ளையமுணல்

வரைப்பா வையைக்கொண்ட தெக்குடி வாழ்க்கைக்கு

வானிரைக்கும்


சங்கரன், ஊமத்தம் பூவைச்சூடி, உலகத்தார் தொழச் சுடுகாட்டில் சுடப்பட்ட பல மண்டை ஓடுகளையும் மாலையாக அணிந்து, பல வீட்டு வாயில்கள் தோறும் பிச்சைக்குத் திரிபவனாய், அடியேனுடைய தலையை விடுத்து இரவும் பகலும் பிரியாதவனாக உள்ளான்.

கு-ரை: உன்மத்தக மலர் - ஊமத்தம் பூ. உலகம் - ‘எல்லா வுலகமும்’. சுடலைப் பல் மத்தகம். சுடு காட்டிலிருந்த பல்லுடைய தலையையும் பலதலைகளையும் கோத்தமாலைகளையும், கொண்டு அணிந்துகொண்டு, பல் கடைதொறும் - பலவீட்டுக் கடை வாயில் தோறும். பலிதிரிவான் - பிச்சைக்காகத்திரிபவன். என் மத்தகத்தே - என் தலையின். இரவும் பகலும் பிரியான்:- ‘ஏற்றாய் அடிக்கே இரவும் பகலும் பிரியாது வணங்குவன் எப்பொழுதும்’ (தி.4 ப.1 பா.1) தன் மத்தகத்து - தன் தலைமேல். ஓர் இளம்பிறை சூடிய சங்கரன். ஓர் இளம் பிறையை அணிந்த இன்பச் செயலன். சங்கரன் - இன்பஞ் செய்பவன். உன்மத்தம் என்பதே ஊமத்தம் என்று மருவியது எனல் ஈண்டு விளங்கும். உன் மத்தகம் என்றது ஆராயத்தக்கது. பின் மூன்றடிக் கண்ணும் மத்தகம் தலையைக் குறிப்பதாயினும், கொண்டது பிரம கபாலத்தையும் தலை மாலையையும். இரவும் பகலும் பிரியாதது பிரமரந்திரத்துள்ள சகச்சிரதளபங்கயத்தில்; பிறை சூடியது சடையில் என்றுணர்க. துவாத சாந்தத்தையும் இரவும் பகலும் பிரியாமைக்குரியதாகக் கொள்ளலாம். இரவு - கேவலம். பகல் - சகலம். கிரியா தீபிகை:- ‘பாவிடையாடு குழல்போற் கரந்து பரந்ததுள்ளம்’ என்னும் திருவாசகத்தையும் நினைக.

7. பொ-ரை: விண்ணுலகமெல்லாம் ஒலிக்கும் ஒலிவடிவினனே! நீக்கப்பட்ட பிரமன் தலை ஓட்டினை ஏந்திய கையினனே! வேதங்கள் தேடுகின்ற எந்தையே! எங்கள் மேம்பட்டவனே! இடையிலே