பக்கம் எண் :

1376
 
இரைப்பா படுதலை யேந்துகை யாமறை

தேடுமெந்தாய்

உரைப்பா ருரைப்பன வேசெய்தி யாலெங்க

ளுத்தமனே.

7


1067.துறக்கப் படாத வுடலைத் துறந்துவெந்

தூதுவரோ

டிறப்ப னிறந்தா லிருவிசும் பேறுவ

னேறிவந்து


கோவண உடை உடுத்து, பிச்சை ஏற்று வாழும் நீ பார்வதியை மணந்து கொண்ட செயல் என்ன குடும்ப வாழ்க்கை நடத்துவதற்கு? உன்னைக் குறை கூறுகின்றவர்கள் குறை கூறுதற்கு ஏற்ற செயல்களையே நீ செய்கின்றாய்.

கு-ரை: வான் இரைக்கும் இரைப்பா விண்ணுலகம் எல்லாம் ஒலிக்கும் ஒலிவடிவினனே, படுதலை ஏந்துகையா - இறந்துபட்ட பிரமனது கபாலத்தைத் தாங்கிய கையினனே. மறைதேடும் எந்தாய் - வேதங்கள் தேடுகின்ற எந்தையே. ‘வேதங்கள் ஐயா என ஓங்கி ஆழ்ந்து அகன்ற நுண்ணியனே’ (தி.8 திருவாசகம்). எங்கள் உத்தமனே; உரைப்பார் உரைப்பன செய்தி - சொல்லுவார் சொல்வனவற்றைச் செய்வாய். அரைப்பால் உடுப்பன:- திருவரையில் உடுப்பன கோவணச் சின்னங்கள்; உண்ணல் ஐயம், ஐயம் - பிச்சையுணவு. கோவணவுடையும் பிச்சை யுண்டியும் உடைய நீ மலைமகளை மணந்து கொண்டது என்ன குடிவாழ்க்கை செய்வதற்கு? வானிரைக்கும் இரைப்பா:- ‘ஓசை யொலியெலாம் ஆனாய் நீயே’. உரைப்பார் உரைப் பன:- ‘உரைப்பார் உரைப்பவையெல்லாம் இரப்பார்க்கு ஒன்று ஈவார் மேல் நிற்கும் புகழ் (திருக்குறள்). சின்னம் - துண்டு. தமிழ்ச்சொல். ‘சின்மை. சின்னஞ் சிறுபிள்ளை. ‘சின்னஞ் சிறிய. பென்னம்பெரிய’ என்பவற்றை அறிக. சின்னம் என்னும் வடசொல் வேறுண்டு. அதன் பொருள் வேறு. ஈண்டு அது பொருந்தாது.

8. பொ-ரை: பற்றற விட்டொழிப்பதற்கு எளியதல்லாத இவ்வுடம்பை விடுத்துக் கொடிய காலதூதருடைய செயல்களால் இறப்பேன். இறந்தால் மேலுலகம் அடைவேன். மேலுலகம் ஏறிவந்து நிலவுலகிற்கு இறங்கி மீண்டும் பிறப்பேன். பிறந்தால் பிறைச்சந்திரனை