| பிறப்பன் பிறந்தாற் பிறையணி வார்சடைப் | | பிஞ்ஞகன்பேர் | | மறப்பன்கொ லோவென்றென் னுள்ளங் கிடந்து | | மறுகிடுமே. | | 8 |
1068. | வேரி வளாய விரைமலர்க் கொன்றை | | புனைந்தனகன் | | சேரி வளாயவென் சிந்தை புகுந்தான் | | றிருமுடிமேல் | | வாரி வளாய வருபுனற் கங்கை | | சடைமறிவாய் | | ஏரி வளாவிக் கிடந்தது போலு | | மிளம்பிறையே. | | 9 |
அணிந்த நீண்ட சடையை உடைய தலைக்கோலத்தை அணிந்த பெருமானுடைய பெயரை மறந்து விடுவேனோ என்று என் உள்ளம் கிடந்து வருந்துகின்றது. கு-ரை: துறக்கப்படாத உடல் - பற்றற விட்டொழிக்க எளிதல்லாத உடம்பு. உடலைத் துறந்து - உடம்பை விட்டு; இறந்து. வெம்தூதுவரோடு - கொடிய யம தூதுவருடன். இறப்பன். இம்மண்ணுலகைக் கடப்பேன். இறந்தால் - கடந்தால். இரு விசும்பு - பெரிய வானுலகம். ஏறுவன் - ஏறிவந்து பிறப்பன்; மீண்டும் மண்ணுலகிற் பிறத்தலை யுணர்த்திற்று. ‘பூதனாசரீரம் போனால் புரியட்ட ரூபந்தானே யாதனா சரீரமாகி இன்பத் துன்பங்களெல்லாம் நாதனார்ஆணை உய்க்க நரகொடு சுவர்க்கம் துய்த்துத் தீதிலா அணுவாய் யோனி சேர்ந்திடும் சீவனெல்லாம்.’ (சித்தியார் சூ.2:-36). பிறந்தால், பிறையைச் சூடிய நீண்ட சடையையுடைய பிஞ்ஞகனது திருப்பெயரை மறந்துவிடுவேனோ என்று என் உள்ளம் அதே நினைவாய்க் கிடந்து சுழலுகின்றது. ‘ஜீவன் முத்தி’ நிலையில் இவ்வையம் உண்டாமெனில். நம்மனோர் கதி என்னையோ? ‘நன்றறிவாரிற் கயவர் திருவுடையார் நெஞ்சத் தவல மிலர்’ (குறள்) ‘இந்தச் சகந்தனில் இரண்டும் இன்றித் தமோமயம் ஆகி எல்லாம் நிகழ்ந்திட மகிழ்ந்து வாழும் நீர்மையார்’ (சிவப்பிரகாசம். 95.) 9. பொ-ரை: தேன் பெருக்கெடுத்தோடும் நறுமணம் கமழும் கொன்றைமலரைச் சூடிப் பாவமில்லாதவனாகிய இறைவன் உலகியல்
|