1069. | கன்னெடுங் காலம் வெதும்பிக் கருங்கட | | னீர்சுருங்கிப் | | பன்னெடுங் கால மழைதான் மறுக்கினும் | | பஞ்சமுண்டென் | | றென்னொடுஞ் சூளறு மஞ்சனெஞ் சேயிமை | | யாதமுக்கண் | | பொன்னெடுங் குன்றமொன் றுண்டுகண் டீரிப் | | புகலிடத்தே. | | 10 |
செய்திகள் யாவும் கலந்து கிடக்கும் அடியேனுடைய உள்ளத்துப் புகுந்தான். அவன் திருமுடி அதன் மேல் வெள்ளமாய் வரும் நீரை உடைய கங்கை இவற்றால் தன் இயக்கம் தடைப்பட இளைய பிறை சடைப் புறமிருந்து திரும்பி ஏரி போன்ற நீர் நிறைந்த கங்கையில் தோய்ந்து கிடக்கிறது. கு-ரை: வேரி - தேன். வளாய - கலந்த. விரை - மணம். மலர்க் கொன்றை - மலர்களாலாகிய கொன்றை மாலையை. புனைந்து - அணிந்து. அனகன் (அநகன்) - மறமில்லான்; பாவமில்லான். என் சிந்தை புகுந்தான் - என் சிந்தையிற் புகுந்தனன். அனகன் புகுந்தான். ‘சேரிவளாய சிந்தை’ என்றதால், அதன் தூய்மை யின்மை உணர்த்தினார். சேர்தல் பொருந்த எனலுமாம். ‘புகுந்தான்:- வினையாலணையும் பெயர், புகுந்தானது திருமுடிமேல்; வாரி வெள்ளம் வளாய - கலந்த. வருபுனல் - விரைந்து வருகின்ற நீர்ப்பெருக்கு, கங்கை சடை இரண்டும் பிறைக்குத் தடையாயிருத்தலின், அவற்றிடை மறிவாகி அக்கங்கையாகிய நீர்நிலையிற் கலந்து கிடந்தது அப்பிறை. மறிவு - மறிதல்; தடைபடுதல். ஏரி - நீர்நிலை. ஏரி - ஏர்க்குப் பயன்படுவது. குளி - குளித்தற்குப் பயனாவது. ஊருணி - ஊரினர் உண்ணப் பயனாவது. இந் நீர்நிலைகளின் பயன் வேறுபாட்டா லுண்டான பெயர் வேறுபாடறியாது, எல்லாவற்றையும் ஒரே பொருளி லாள்வது பொருந்தாது. ‘ஏரி நிறைந்தனையசெல்வன்’ ‘வண்டுடைக் குளத்தின் மீக்கொளமேன் மேல் மகிழ்தலின் நோக்கி’ ‘ஊருணி நீர் நிறைந்தற்றே உலகவாம் பேரறிவாளன் திரு.’ (குறள்) 10. பொ-ரை: நெடுங்காலம் மலைகள் மழையின்றிச் சூடேறக் கரிய கடலின் நீர் சுருங்குமாறு பல ஆண்டுகள் மழை பெய்யாது போயினும் பஞ்சம் ஏற்படுமே என்று அஞ்சாதே. என்னிடம் வஞ்சினம் கூறும் மனமே! எல்லா உயிர்க்கும் புகலிடமாகிய இச்சிவ பூமியிலே
|