பக்கம் எண் :

16
 

குருபாதம்

திருக்கயிலாய பரம்பரைத் தருமை ஆதீனம்
26 ஆவது குருமகாசந்நிதானம்

ஸ்ரீலஸ்ரீ சண்முக தேசிக ஞானசம்பந்த
பரமாசாரிய சுவாமிகள் வழங்கியருளிய

ஆசியுரை

பதிகம்ஏ ழெழுநூறு பகரும்மா கவியோகி

பரசுநா வரசான பரமகா ரணஈசன்

ஆதிகை மாநகர்மேவி அருளினால் அமண்மூடர்

அவர்செய்வா தைகள்தீரும் அனகன்வார் கழல்சூடின்

நிதியராகு வர், சீர்மை உடையராகுவர், வாய்மை

நெறியராகு வர், பாவம்வெறியரா குவர்சால

மதியரா குவர், ஈசன் அடியரா குவர், வானம்

உடையரா குவர், பாரில்மனிதரா னவர்தாமே’

-நம்பியாண்டார்நம்பிகள்.

நால்வர் வாழ்வு காட்டும் உண்மை:

பரமன் பாலைக்கொடுத்து ஞானசம்பந்தரை ஆட்கொண்டார். “போதையார் பொற்கிண்ணத்து அடிசில் பொல்லாதெனத், தாதையார் முனிவுறத் தான் எனை ஆண்டவன்” என்பது ஞானசம்பந்தர் அகச்சான்று

சூலைகொடுத்து நாவுக்கரசரை ஆட்கொண்டார்.“சூலை தீர்த்து அடியேனை ஆட்கொண்டாரே” என்பது நாவரசர் நற்சான்று.

ஓலை கொடுத்துச் சுந்தரரை ஆட்கொண்டார் "அன்று வந்தெனை அகலிடத்தவர் முன் ஆளதாக என்று ஆவணம் காட்டி"