என்றும், காலிங்கராயன் திருப்பணிகளைக் குறிக்கும் கல்வெட்டுப் பாடல்களில் அதிகை என்றும் குறிக்கப்பெறுகிறது. இத்தலத்துத் திருக்கோயிலை நிருபதுங்கதேவரின் 13ஆம் ஆண்டில் முனைப்பாடி ஆமூர்பெருங்குளத்தில் வாழ்ந்து வந்த முனைப்பேரரையர் மகன் முனையர்கோன் இளவரையர் புதுப்பித்தார். கேரளவம்சத்து இரவிவர்ம மகாராஜர் ஆன பெருமாள் குலசேகரதேவர், இக்கோயிலின் வான் கயிலாயத்திருமாளிகையை ஸ்தூபி பரியந்தம் திருமஞ்சனம் பண்ணிப்புறச்சாருணைத் திருக்கல்லும் சாத்தி அருளினார்.இது நிகழ்ந்த காலம் கி.பி.1313 ஆகும். அம்பிகை எழுந்தருளியிருந்த திருக்காமக் கோட்டத்தை முதற்குலோத்துங்க சோழன். விக்கிரம சோழன் ஆகியோரின் படைத்தலைவராய் இருந்த கூத்தர் காலிங்கராயர் கட்டினார். இவர் வீரட்டானேஸ்வரம் உடையார் கோயிலைப் பொன்வேய்ந்தார். மேலும் திருநாவுக்கரசருக்குத் திருவதிகைத் திருக்கோயிலுக்குள் ஈசான்ய பாகத்தில் ஒரு தனிக்கோயிலும்கட்டினார். இச்செய்திகள் வீரட்டானத் திருக்கோயில் கல்வெட்டுப் பாடல்களில் காணப்பெறுகின்றன. திருக்கயிலாய அமைப்பு: இன்று திருவதிகைத் திருக்கோயிலில் அம்பிகைக்குரிய காமக்கோட்டம் பழுதடைந்துவிட்டதனால் சுவாமி கோயிலை ஒட்டியேவலப்பாகத்தில் பிற்காலத்தில் கட்டியுள்ள ஒருகோயிலில்தான் அம்பிகை எழுந்தருளியுள்ளார். சுவாமிகோயிலில் கருவறைக்கு உள்ளேயே ஒரு பிராகாரம் உள்ளது. இது கயிலாயத்தில் உள்ள அமைப்புப்போன்றது. இப்பிராகாரம் இன்று இருபுறமும் அடைக்கப்பெற்றுள்ளது. இங்ஙனம் கருவறைக்குள்ளேயே பிராகாரம் உள்ள அமைப்புதஞ்சைப் பெரிய கோயிலிலும், கங்கைகொண்டசோழபுரக் கோயிலிலும் உள்ளன. இந்த நிலை கயிலாயத்திருமலையிலும் உள்ளது. இவ்விமானம் கயிலாய அமைப்பில் அமைந்துள்ளது. திருஅதிகை - பெயர்க்காரணம்: இத்தலத்திற்குத் திருவதிகை என்ற பெயரும் இறைவன் எழுந்தருளியுள்ள திருக்கோயிலுக்கு வீரட்டானம் என்ற பெயரும்
|