கின்றன. இராஜகேசரி வர்மனாகிய திருபுவனச் சக்கரவர்த்தி குலோத்துங்கசோழன் கல்வெட்டு திருப்பதியம் பாடுவதற்கு நிவந்தம் அளிக்கப்பெற்ற செய்தியைத் தெரிவிக்கின்றது. இராஜேந்திரசோழன் கல்வெட்டு விக்கிரமன் சந்தியையும் ஏனைய கல்வெட்டுக்கள,் விளக்கினுக்கு, ஆடு, ஈழக்காசு இவைகள் கொடுக்கப்பட்டதைப் புலப்படுத்துகின்றன. மராத்திமொழியில் உள்ள கல்வெட்டு பிரதாபசிங்மகாராசர், துளஜாமகாராசர் என்போரைப்பற்றிக் கூறுகின்றன 47. திருமாற்பேறு தொண்டை நாட்டுத்தலம். காஞ்சிபுரம் - அரக்கோணம் இருப்புப்பாதையில் இரயில் நிலயம். காஞ்சிபுரத்திலிருந்து பேருந்துவசதி உள்ளது. இதுவே எளிதானது. இத்தலம் ஹரிசக்ரபுரம் எனவும் வழங்கும். திருமால் ததீசி முனிவருடன் போர்செய்ய அவர் சக்கரம் வாய்மடிந்து போயிற்று. சலந்தரனைக் கொன்ற சக்கரம் சங்கரனிடத்திருப்பதையறிந்த திருமால்இத்தலத்திற்கு வந்து இறைவனை ஆயிரந்தாமரைகொண்டு அர்ச்சிக்க, இறைவன் ஒரு நாள் ஒரு மலரை மறைத்துவிட்டார். திருமால் அதற்குப்பதிலாகத் தம் கண்ணையிடந்து அர்ச்சிக்க சுதரிசனம் என்னும் சக்கரத்தை ஈந்தார். கண் இடந்து அர்ச்சித்தமைக்காகப் பதுமாக்ஷன் என்னும் பெயரையும் கொடுத்தார். சோமனும் பூசித்துப் பேறுபெற்ற தலம். இச்செய்தி ‘மன்னி மாலொடு சோமன் பணிசெயும் மன்னுமாற் பேற்றடிகளை’ என்னும் தேவாரத்தானும் ‘பெருமாற்றின் படைவேண்டி நற்பூம்புனல் வருமாற்றின் மலர் கொண்டுவழிபடும் கருமாற்கின்னருள் செய்தவன்’ என்னும் திருக்குறுந்தொகை யானும் அறியப்படும். இறைவன்பெயர் மால்வணங்கீசர் மணிகண்டேசர். இறைவி கருணைநாயகி அஞ்சனாக்ஷியம்மை தீர்த்தம் பாலாறு. கல்வெட்டு: ஜயங்கொண்ட சோழமண்டலத்திலுள்ள காமக்கோட்டத்தின் பகுதியான வல்ல நாட்டிலுள்ள திருமாற்பேறு1 என்று இராஜகேசரி வர்மன் திரிபுவனச்சக்ரவர்த்தி குலோத்துங்க சோழன்காலத்தில் குறிக்கப்பட்டுள்ளது. இறைவன் பெயர் கல்வெட்டுக்களில் திருமாற் பேறுடையார் ஆளுடையார் உத்தம சோழீசுவரமுடையார்
1. 271 of 1906
|