சமணரையும் சுண்ணம் ஆக்கி, நம் அண்ணலை வணங்கிப் போயிற்று. மந்தரகிரி போலும் அது மன்னனையும் வருத்திற்று. கற்றுணைப் பூட்டிக் கடலிற் பாய்ச்சினர் சமணர். சொற்றுணை வேதியன் பொற்றுணைத் திருந்தடி தொழுது நீலக்குடியரன் நல்ல நமச்சிவாய நாமத்தை நவிற்றி நன்றே உய்ந்தார் நாவரசர். மும்மலமான கல்லில் இருவினையான கயிற்றால் ஆர்த்துப் பாவக்கடலிற் பாய்ச்சப்படும் மாக்களை முத்திக் கரையில் ஏற்றியருளும் அத் திருவைந்தெழுத்து, நாவரசை இவ்வுவர்க்கடலின் ஆழாது, ஒரு கல் மேல் ஏற்றுதல் வியப்போ? திருப்பாதிரிப்புலியூரை அடுத்த கரையேற விட்ட குப்பமே அவ்வுண்மையைத் தேற்றி நிற்குஞ் சான்றாகும். அத் ‘தோன்றாத் துணை’ யைத் தொழுது உண்மையை உணர்வார் உணர்க. சொல்வேந்தர் திருவதிகையிற்சென்று வழிபட்டு வாழ்ந்திருந்தார். பல்லவ மன்னன் பல்லவமும் நீங்கி நல்லவனாகி, நாயனாரை வணங்கித் தூயனும் சைவனும்ஆனான். சமணருடைய மடம் கோயில் முதலியவற்றைச் சிவாலயம் ஆக்கினான். “பாடலி புத்திரத்தில்அமண் பள்ளியொடு பாழிகளும் கூடஇடித்துக் கொணர்ந்து குணபரவீச் சரம்எடுத்தான்” நாவரசர் சிவதலம் பலவற்றை அடைந்து வழிபட்டுப் பாடினார். சமண்சார்பு தீர நினைந்து வேண்டித் திருத்தூங்கானை மாடத்தில் ‘வடியேறு திரிசூலக்குறி’ ‘இடபம்’ ஆகிய இலச்சினை திருத்தோளிற் பொறிக்கப்பெற்றார். தில்லைச்சிதம்பரத்தை வணங்கி எல்லையில்லா இன்புற்றார். திருக்காழியில் திருஞானசம்பந்தமூர்த்தி நாயனாரை வணங்கி, ‘அப்பர்’எனப் பெயர் உற்றார். ஆனந்தவுருவானார். அளவில்லாச் சிவதலங்களை வழிபட்டுத் திருச்சத்திமுற்றத்தில் திருவடி சூட்ட வேண்டினார். திருநல்லூரில் நனைந்தனைய திருவடி தலைமேல் வைத்தருளப் பெற்று நம்மையும் வாழ்வித்தார். திங்களூரில் தம்மை மறவாது தம் திருவடியையே என்றும் அன்பால் செப்பும் ஊதியம் கைக்கொண்ட அப்பூதியடிகளாரின் பிள்ளையான மூத்த திருநாவுக்கரசு. நச்சராத் தீண்டி இறக்க, திருவருளைத் துணைக் கொண்டு உயிர்ப்பித்தருளினார். திருவாரூர் முதலிய தலங்களைப் போற்றினார். திருஞான சம்பந்தர், முருக நாயனார் முதலோரொடும் திருப்புகலூர் முதலியவற்றை வழிபட்டார். திருவீழிமிழலையிற் படிக்காசு பெற்றுப் பஞ்சம் தீர்த்து மக்களை வாழ்வித்தார். திருமறைக்காட்டில் விண்ணோர்
|