பக்கம் எண் :

312
 

வணங்குவன் என்றது எவ்வாறு பொருந்தும் எனின், கூறுதும்.

இது திருநாவுக்கரசு சுவாமிகளுக்கு மட்டும் அன்று. புது நெறியிற் புக்க யாவர்க்கும் தொன்னெறியிற் பற்று நீங்காது; புது நெறியில் ஒரு துணிவுண்டாகாது; பழநெறியிலிருந்தால் இப்பிறவியிலேயே வீடு பெறலாம் என்ற எண்ணம் அகலாது. இஃது உள்ளத்தியற்கை. சைவ சித்தாந்தச்செந் நெறிப்படியும் பரசிவனை மறவாமை வாய்மையாகின்றது. எவ்வாறு?

“யாதோர் தேவர் எனப்படுவார்க் கெல்லாம்
மாதேவன் அல்லால் தேவர்மற்று இல்லையே”

என்று (தி.5 ப.100 பா.9) அவர் திருவாய் மலர்ந்தருளியதாலும்“யாதொரு தெய்வம் கொண்டீர் அத்தெய்வம் ஆகி ஆங்கே மாதொரு பாகனார் தாம் வருவர்” என்று அருணந்தி தேவநாயனார் அருளிய திரு வாக்காலும், இராப் பகல் எல்லாம் சிவபிரானை மறவாத சீர்த்தி சுவாமிளுக்கு உண்டு என்பது உறுதியாயிற்று.

“வாழ்த்த வாயும் நினைக்க மடநெஞ்சும்
தாழ்த்தச் சென்னியும் தந்த தலைவனைச்
சூழ்த்த மாமலர் தூவித் துதியாதே
வீழ்த்த வாவினை யேன்நெடுங் காலமே.” (தி.5 ப.90பா.7)

என்று அருளினார் பின்னர். சலம் பூவொடு தூபம் மறந்தறியேன் என்று அருளினார் முன்னர். இது முரணுவதே? இதுவும் பலர் வினாவுவதே. ‘பூக் கைக் கொண்டு அரன் பொன்னடி போற்றிலார் ... கழிவரே’,‘நெக்கு நெக்கு நினைபவர் நெஞ்சுளே புக்கு நிற்கும் ... புண்ணியன், பொக்க மிக்கவர் பூவும் நீரும் கண்டு நக்கு நிற்பன் அவர் தம்மை நாணியே’ என்றவற்றையும் ‘பல் மலர் தூவித் தோளைக் குளிரத் தொழுவேன்’ என்பது முதலியவற்றையும் ஒருங்குவைத்து நோக்குவார்க்குச் செவ்வன் இறை (நேர்விடை)தோன்றும்.

திருவதிகை வீரட்டானத் திறைவர்வினா:- ஏன் இங்கு


குறிப்பு: மேற்போந்தவாறான ஆய்வுகள், சுவாமிகள் முன்மை பின்மையுணர்வுகளைத் தொடர்புபடுத்திச் செய்யின் யாப்பவர் அவர் பாடல்கள்பசு உணர்விற்றட்டாதெழும் பரஞானப் பொழிவுகள் அல்ல என்ற ஒரு கருத்துக் குழப்பத்தை விளைப்பனவும் ஆம்.