பக்கம் எண் :

341
 
நாடற் கரியதொர் கூத்தும் நன்குயர் வீரட்டஞ் சூழ்ந்து.
ஓடுங் கெடிலப் புனலு முடையா ரொருவர் தமர்நாம்

அஞ்சுவதி யாதொன்று மில்லை அஞ்ச வருவது மில்லை.

8


19.சூழு மரவத் துகிலுந் துகில்கிழி கோவணக் கீளூம்
யாழின் மொழியவ ளஞ்ச அஞ்சா தருவரை போன்ற
வேழ முரித்த நிலையும் விரிபொழில் வீரட்டஞ் சூழ்ந்து
தாழுங் கெடிலப் புனலு முடையா ரொருவர் தமர்நாம்

அஞ்சுவதி யாதொன்று மில்லை அஞ்ச வருவது மில்லை.

9


இடுப்பில் இறுக்கிக் கட்டிய பாம்பும், இசைக் கருவிகளைக் கைகளில் கொண்டு, பல ஆயிரக்கணக்கில் சூழ்ந்த பாடல்களில் பழகிய பூதங்கள் பலவும், ஆராய்ந்து, அறியமுடியாத கூத்தும், மிக உயர்ந்த வீரட்டக் கோயிலை ஒரு பக்கத்தில் சுற்றி ஓடும் கெடில நதித் தீர்த்தமும் உடைய அதிகை வீரட்டரின் அடியேம் யாங்கள். ஆதலில் அஞ்சுவது யாதொன்றும் இல்லை. அஞ்ச வருவதும் இல்லை.

கு-ரை: ஆடல் புரிந்த நிலை - திருக்கூத்தாடிய நிலை. அரை - (நடு) இடை. அரவு - பாம்பு. பாடல் - பாட்டு . ‘நாடற்கு அரியது ஓர் கூத்தும்’ ‘அரங்கிடை நூலறிவாளர் அறியப்படாத தொர் கூத்தும்’ (தி.4. ப.2. பா.6) அக்கூத்தினை நாடற்குப் பல்லாயிரங் கருவி இருப்பினும் அக்கூத்து நாடற்கரியதே. கோயிலைக் கண்டோர் வீரட்டத்தின் நன்குயர்வை அறிவர். ஓடும் கெடிலப் புனல் - வீரட்டத்தைச் சூழ்ந்து ஓடும் புனல்.

9. பொ-ரை: பாம்பினால் சுற்றப்பட்ட ஆடையும், துணியிலிருந்து கிழித்தெடுக்கப்பட்ட அரைஞாணோடு கூடிய கோவணமும், யாழ் ஒலி போன்ற இனிய குரலை உடைய பார்வதி அஞ்சுமாறு அச்சமின்றிப் பெரிய மலை போன்று வந்த வேழத்தின் தோலை உரித்த காட்சியும், சோலைகள் மிகுந்த வீரட்டத்தை ஒருபுறம் சுற்றிப் பள்ளத்தில் பாயும் கெடில நதித் தீர்த்தமும் உடைய அதிகை வீரட்டரின் அடியேம் யாங்கள். ஆதலின் எங்களுக்கு அஞ்சுதற்குரிய பொருள் யாதும் இப்பொழுது இல்லை. இனித் தோன்றப் போவதும் இல்லை.

கு-ரை: அரவத்துகில் - ஒலியல். துகில்கிழி -கோவணக்கீள்; கிழிப்பது கிழி. கீழ் - கீள், மரூஉ. குபினம் - அழுக்கு. குபின் சம்பந்தம் கௌபீனம்; கோவணம் மரூஉ. யாழின் மொழியவள் - யாழொலி