| 20. | நரம்பெழு கைகள் பிடித்து நங்கைநடுங்க மலையை | | உரங்களெல் லாங்கொண்டெடுத்தானொன்பது மொன்று மலற | | வரங்கள் கொடுத்தருள் செய்வான்வளர்பொழில் வீரட்டஞ் சூழ்ந்து | | நிரம்பு கெடிலப் புனலு முடையாரொருவர் தமர்நாம் | | அஞ்சுவதியாதொன்று மில்லை அஞ்ச வருவது மில்லை. | | 10 |
திருச்சிற்றம்பலம்
போலும் இனிய மொழியையுடைய உமையம்மையார். வேழம் உரித்தவர் அஞ்சிலர். உரிக்கும் கால் அங்கு இருந்தவர் அஞ்சினார். அஞ்சாமைச் சிறப்புணர்த்த அருவரை போன்ற வேழம். ‘கைம்மலை’ ‘கைவரை’ ‘நடைமலை’ ‘நடைக்குன்றம்’ ‘வருங்குன்றம்’. வீரட்டம் சூழ்ந்து தாழும் புனல். 10. பொ-ரை: பார்வதி நடுங்கும்படியாக நரம்புகளால் செயற்படும் கைகளைக் கோத்து தன் வலிமையை எல்லாம் ஒன்று சேர்த்துக் கயிலை மலையைப் பெயர்த்த இராவணனுடைய பத்துத் தலைகளும் கதறும்படியாக முதலில் அழுத்திப் பின் அவன் பாடிய சாமகானம் கேட்டு அவனுக்கு வரங்கள் கொடுத்து அருள் செய்த பெருமானாய், வளருகின்ற சோலைகளை உடைய வீரட்டக் கோயிலை ஒரு புறம் சுற்றி நீர் நிரம்பியுள்ள கெடில நதித் தீர்த்தத்தை உடைய அதிகை வீரட்டரின் அடியேம் யாங்கள். அஞ்சுவது யாதொன்றும் இல்லை. அஞ்ச வருவதும் இல்லை. கு-ரை: நரம்பு எழு கைகள்:- ‘என்பு எழுந்து இயங்கும் யாக்கையர்’ (தி.11திருமுருகு.130) ‘நரம்பு எழுந்துலறிய நிரம்பாமென்றோள்;(புறம். 278) என்புழிப் போலக் கொண்டு நரம்புகள் எழுந்து தோன்றும் கைகள். இது சிவனுக்குப் பொருந்து மேற்கொள்க. ‘பண்ணார்ந்த வீணை பயின்ற விரலவன்’, ‘இடங்கை வீணை ஏந்தி’, ‘பண்ணமர் வீணையினான்’, ‘மிக நல்ல வீணை தடவி’, ‘நுண்ணூற் சிந்தை விரட்டும் விரலன்’ (பதிற்றுப் பத்து, கடவுள் வாழ்த்து)‘கையதோர் சிரந்தையன்’ (தி.1 ப.61 பா.3) என்பவற்றை உட்கொண்டு, இசை நரம்பு எனலும் பொருந்தும். பிடித்தது அச்சத்தால். ‘மலையான் மகள் அஞ்சவ்வரை எடுத்தவ் வலியரக்கன்’ (தி.1 ப.9 பா.8) நங்கை - உமாதேவியார். என்கை (எங்கை) தன்கை (தங்கை) நுன்கை (நுங்கை) என்பன போல நன்கை என்பது நங்கையென்றாயிற்று. மண்கை (மங்கை)போல நண்கை (நங்கை)யும் ஆம். உரம் - வலிமை. உரங்கள் எனப் பன்மையாகக் கூறுதலால் மார்பு எனல் பொருந்தாது. வாய்களும் அலறின. வரங்கள்:- பெயர், வாழ்நாள், கோலவாள் முதலியன.
|