பக்கம் எண் :

346
 

பண்: காந்தாரம்

பதிக எண்: 3

திருச்சிற்றம்பலம்

21.மாதர்ப் பிறைக்கண்ணி யானை மலையான் மகளொடும் பாடிப்
போதொடு நீர்சுமந் தேத்திப் புகுவா ரவர்பின் புகுவேன்
யாதுஞ் சுவடு படாமல் ஐயா றடைகின்ற போது
காதன் மடப்பிடி யோடுங் களிறு வருவன கண்டேன்

கண்டே னவர்திருப் பாதங் கண்டறி யாதன கண்டேன்.

1


1. பொ-ரை: விரும்பத்தக்க பிறையை முடிமாலையாகச் சூடிய பெருமானைப் பார்வதியோடும் இணைத்துப் பாடியவர்களாய் அருச்சிக்கும் பூவும் அபிடேக நீரும் தலையில் தாங்கித் திருக்கோயிலை நோக்கிப் பெருமானைத் துதித்த வண்ணம் புகும் அடியவர்பின் சென்ற அடியேன். கயிலை மலைக்குச் சென்றபோது ஏற்பட்ட உறுப்பழிவின் சுவடு ஏதும் தோன்றாதவகையில் தீங்கு நீங்கிய யாக்கை கொண்டு, கயிலை மலையிலிருந்து கால்சுவடு படாமல் திருவையாற்றை அடைகின்ற பொழுதில், விருப்பத்திற்கு உரிய இளைய பெண்யானையோடு ஆண்யானை சேர்ந்து இரண்டுமாக வருவனவற்றைக் கண்டு, அவற்றை அடியேன் சத்தியும் சிவமுமாகக் கண்டதனால் திருப்பாதம், சிவானந்தம் ஆகிய முன் கண்டறியாதனவற்றைக் கண்டவனாயினேன்.

கு-ரை: மாதர்ப்பிறை - அழகுடைய பிறை. பிறைக்கு அழகு முழுமுதற் பொருளின் தலைமேல் வாழ்தலும், வளராத் தேயாச் சிறப்பும், பாம்பினை அஞ்சாமையுமாம். ‘அப்பிறை பதினெண் கணனும் ஏத்தவும் படுமே’ (புறநானூறு கடவுள் வாழ்த்து) என்னும் அதன் சிறப்புணர்க. பிறைக்கண்ணி - பிறையாகிய கண்ணி. தலைமாலை. கண்ணி - தலையில் அணிவது; ஒரு பக்கம் காம்பு மட்டும் சேர்க்கும் பூந்தொடை. போதொடு நீர் - வழிபாட்டிற்குரிய பூவும் புனலும். புகுவார் -அடியவர். யாதும் என்பது ஆதும் என்றாதலுண்டு ‘சென்று ஆதுவேண்டிற்று ஒன்று ஈவான்’ (தி.6 ப.20 பா.9) ‘நிலமிகு கீழும் மேலும் நிகர் ஆதும் இல்லை என நின்ற நீதியான்’(தி.2ப.84ப.ா8) என அரசும் கன்றும் அருளிய வற்றாலும் அறிக. நம்மாழ்வார் திருவாய் மொழியிலும் ‘ஆதும் இல்லை’‘ஆதும் ஓர் பற்றிலாத பாவனை’ எனல் காண்க. ‘யாதேசெய்தும் யாம் அலோம் நீஎன்னில் ‘ஆதே’ ‘ஏயும் அளவில் பெருமையான்’ (திருக்குறுந்தொகை) என்பதில் அதுவே என்னும் பொருட்டு ஆதலின் அதுவேறு. சுவடுபடாமை:- ‘பங்கயம்