| 22. | போழிளங் கண்ணியி னானைப் பூந்துகி லாளொடும் பாடி | | வாழியம் போற்றியென் றேத்தி வட்டமிட் டாடா வருவேன் | | ஆழி வலவனின் றேத்தும் ஐயா றடைகின்ற போது | | கோழி பெடையொடுங் கூடிக் குளிர்ந்து வருவன கண்டேன் | | கண்டே னவர்திருப் பாதங் கண்டறி யாதன கண்டேன். | | 2 |
புரைதாள் பரட்டளவும் பசைத் தசை தேயவும் கைகளும் மணிபந்து அசைந்துறவே கரைந்து சிதைந்தருகவும்’ ‘மார்பமும் தசை நைந்து சிந்தி வரிந்த என்பு முரிந்திடவும்’‘உடம்பு அடங்கவும் ஊன் கெடவும்’, சேர்வரும் பழுவம் புரண்டு புரண்டு செல்லவும்’ (தி.12. அப்பர். 357-360)உறுப்பழியவும் நின்ற சுவடு தோன்றாமல், தீங்கு நீங்கிய யாக்கை கொண்டு எழுந்து ஒளி திகழ்வாராய்ச் செல்லும் தூய்மை தோன்றல். பிடி - பெண் யானை. களிறு - ஆண்யானை; களிப்புடையது என்னும் காரணப்பொருட்டு. பிடியும் களிறும் சத்தியும் சிவமும் ஆகக் கண்டதால்திருப்பாதம் சிவாநந்தம் ஆகிய முன் கண்டறியாதனவற்றைக் கண்டேன் என்று தம் பேரின்ப நுகர்ச்சியைப் புலப்படுத்தினார். பின் உள்ள எல்லாவற்றினும் பிறையும் பெருமாட்டியும் முதலடியிற் கூறப்பெற்றிருத்தல் அறிக. காட்சியருளிய பிறை சூடி (சந்திரசேகரர்) கோயில், அகச்சுற்றின்கண் தென்மேற்கு மூலையில் உளது. 2. பொ-ரை: சந்திரனுடைய பிளப்பாகிய பிறையை முடிமாலையாகச் சூடிய பெருமானை, பூ வேலைகள் செய்யப்பட்ட மெல்லிய ஆடையை அணிந்த பார்வதியோடு இணைத்துப்பாடி, ‘அவர்கள் திருவடி வாழ்க’ எனவும், ‘அவர்களுக்கு அடியேனுடைய வணக்கம்’ எனவும் சுழன்று ஆடிக்கொண்டு வரும் அடியேன் சக்கரப்படையை வலக்கையில் ஏந்தியுள்ள திருமால் நிலையாகப் புகழும் ஐயாற்றை அடையும்போது ஆண்கோழி பெண்கோழியுடன் கூட இரண்டுமாக மகிழ்வுடன் வருவனவற்றைக் கண்டேன். அவற்றை அடியேன் சக்தியும் சிவமுமாகக் கண்டதனால் திருப்பாதம் சிவானந்தம் ஆகிய முன் கண்டறியாதவற்றைக் கண்டேன். கு-ரை: போழ்இளங் கண்ணியினானை - இளம் பிறையாகிய தலை மாலையினை அணிந்தவனை. பூந்துகிலாள் - இடப்பால் உள்ள நாய்ச்சியார். வாழி போற்றி என்று ஏத்தியும் வட்டம் இட்டு ஆடியும் வருவேன். ஆழிவலவன் - திருமால். ஆழி - சக்கரம். வலவன் - வலக்
|