4. திருவாரூர் பதிக வரலாறு: திருநாவுக்கரசு சுவாமிகள் திருவாரூரிலே தேவாசிரியன் முன் இறைஞ்சித் திருமாளிகை வாயிலுட் புகுந்து மாமணிப் புற்றுகந்தாரைநேர்கண்டு கொண்டார்; தொழுதார்; விழுந்தார்; புளகாங்கிதரானார்; எழுந்தார்; அன்புகூர்ந்தார்; கண்கள் தண்துளிமாரி பொழியத் திருமூலட்டானரைப் போற்றினார்; துதித்தார்; உருகினார்; மணிக்கோயிலை வலம் வந்து இறைஞ்சி அன்பு பூண்ட மனத்தொடு வாயிற்புறத்துச் சேர்ந்தார்; திருப்பதிகம் பாடினார்; அதில் சமண்சார்ந்த தீங்கு நினைந்து கவன்றார்; ‘மார்பாரப் பொழி கண்ணீர் மழைவாருந் திருவடிவும் மதுரவாக்கில் சேர்வு ஆகும் திருவாயின் தீந்தமிழின் மாலைகளும் செம்பொற்றாளே சார்வான திருமனமும் உழவாரத் தனிப்படையும் தாமும் ஆகிப் பார்வாழத் திருவீதிப் பணிசெய்து பணிந்து ஏத்திப் பரவிச் செல்வார்’ ஆனார். அப்பொழுது நீடுபுகழ்த் திருவாரூர் நிலவுமணிப் புற்றிடங்கொண்ட நிருத்தரை அன்பொடு காலங்களில் அணைந்து கும்பிட்டுப் பாடியருளிய கோதில் வாய்மைத் திருப்பதிகம் பலவற்றுள் ஒன்று இது. பண்: காந்தாரம் பதிக எண்:4 திருச்சிற்றம்பலம் | 32. | பாடிளம் பூதத்தி னானும் | | பவளச்செவ் வாய்வண்ணத் தானும் | | கூடிள மென்முலை யாளைக் | | கூடிய கோலத்தி னானும் | | ஓடிள வெண்பிறை யானும் | | ஒளிதிகழ் சூலத்தி னானும் | | ஆடிளம் பாம்பசைத் தானு | | மாரூ ரமர்ந்தவம் மானே. | | 1 |
1. பொ-ரை: ஆரூரில் உகந்தருளியிருக்கும் பெருமான், பாடுகின்ற இளைய பூதங்களை உடையவனும், சிவந்தவாயினை
|