பக்கம் எண் :

354
 
அளவு படாததொ ரன்போ டையா றடைகின்ற போது
இளமண நாகு தழுவி யேறு வருவன கண்டேன்

கண்டே னவர்திருப் பாதங் கண்டறி யாதன கண்டேன்.

11

திருச்சிற்றம்பலம்


பொழுது இளமையை உடையதாய்க் கலத்தலுக்கு ஏற்றதாய பசுவினை, ஏறு தழுவ, இரண்டுமாய் இணைந்து வருவனவற்றைக் கண்டேன். அவற்றை அடியேன் சக்தியும் சிவமுமாகக் கண்டதனால் திருப்பாதம் சிவானந்தம் ஆகிய முன் கண்டறியாதவற்றைக் கண்டேன்.

கு-ரை: வளர்மதி- வளர்பிறை. ‘நிறைநீர நீரவர் கேண்மை பிறை மதிப் பின்னீர பேதையார் நட்பு’ (திருக்குறள் 782). வார்தல் நீளமாய் வளர்தல். களவு படாததோர் காலம்காண்பான் - களவை அடையாததொரு காலத்தைக் காணும்பொருட்டு. காண்பான் - வினையெச்சம் (நன்னூல். 343). காட்சி - தரிசநம் என்பர் வடநூலார். கடைக்கண் -
(-கடைவாயிலின்கண்) நிற்கின்றேன். கடைக்கணிக்கின்றேன் என்றது எழுதினோரால் பிழைபட்ட பாடம். முற்பாடல்பலவற்றில் வருவேன் என்றார். இதில் வந்து நிற்கின்றேன் என்றார்.

‘ஞாலமே விசும்பே இவை வந்து போம்காலம்’ களவு படுங்காலம். ‘பரம்பரனைப் பணியாதே பாழுக் கிறைத்த எத்தனையோ காலம்’ களவுபட்டன. ‘கால வரையறையைக் கடந்து காலத்தினையும் தோற்றித் தொழிற்படுத்தும் கால காலனாகிய முதல்வனாற் செய்யப்படும் காரியத்திற்குக் காலம் வேண்டா’ (சிவஞானபாடியம். சூ. 2. காலதத்துவம்). அதனால் அவனது அழியாத இன்ப நிலையைப் பெற்றவர்க்குரியது களவு படாததோர் காலம் என்று உபசரிக்கப்பட்டது. அதைக் காண்பதற்காக இறைவன் கோயிற் கடைவாயிலின் கண் நிற்கின்றேன் என்றார். இடையறவுபடாது நெடுங்காலம் காண எனலுமாம்.

அளவு படாததோரன்புக்கும் அவ்வாறு உரைத்துக்கொள்க. திருவடிக்கன்பு அளவுபடாதது. ஏனையனைத்தும் அளவுபடுவனவேயாகும். நாகு - பெடை. ஏறு -ஆண் (எருது).