பக்கம் எண் :

353
 
30.திங்கள் மதிக்கண்ணி யானைத் தேமெழி யாளொடும் பாடி
எங்கருள் நல்குங்கொ லெந்தை யெனக்கினி யென்னா வருவேன்
அங்கிள மங்கைய ராடும் ஐயா றடைகின்ற போது
பைங்கிளி பேடையொ டாடிப் பறந்து வருவன கண்டேன்

கண்டே னவர்திருப் பாதங் கண்டறி யாதன கண்டேன்.

10


31.வளர்மதிக் கண்ணியி னானை வார்குழ லாளொடும் பாடிக்
களவு படாததொர் காலங் காண்பான் கடைக்கணிற் கின்றேன்

(திருக்குறள் 350) ‘சுற்றிய சுற்றத் தொடர்வறுப்பான் தொல்புகழே பற்றி இப்பாசத்தைப் பற்றற நாம் பற்றுவான்பற்றிபே ரானந்தம் பாடுதும் காண் அம்மானாய்’ (தி.8 திருவா. 194). அற்று - ஒரு பற்று மில்லா தொழிந்து. ‘அற்றவர்க்கு அற்ற சிவன்’ (தி.3 ப.120 பா.2). அற்று என்பற்கு விளங்கி எனலும் உண்டு. பொருள் புலப்படவில்லை என்புழி அறவில்லை என்று உலகிற் பலர் வழங்குகின்றனர். நற்றுணையாகிய பேடை. நாரைக்குப் பேடை துணை. துணைக்கு நன்மை அடை.

10. பொ-ரை: பிறை சூடிய பெருமானைத் தேன் போன்ற சொற்களை உடைய பார்வதியோடு இணைத்துப் பாடி எம்பெருமான் இப்பொழுது அடியேனுக்கு எங்கு அருள் செய்வானோ என்று திருத்தலங்களை வழிபட்டுவரும் அடியேன் இளமங்கையர்கள் கூத்து நிகழ்த்தும் ஐயாற்றை அடையும்போது பச்சைக் கிளி தன் பெடையோடு மகிழ, இரண்டுமாக இணைந்து பறந்து வருவனவற்றைக் கண்டேன். அவற்றை அடியேன் சக்தியும் சிவமுமாகக் கண்டதனால் திருப்பாதம் சிவானந்தம் ஆகிய முன் கண்டறியாதவற்றைக் கண்டேன்.

கு-ரை: திங்கள் மதி - ஒரு பொருட் பல பெயர். திங்கள் சாந்திர மானம் பற்றிய திங்களை விளைவிப்பது. காரணப்பெயர். மதி பிறை என்னும் பொருட்டு. சந்திரனுக்கு வடமொழியில் மதி என்னும் பெயரில்லை. இரண்டும் தமிழ்ச் சொல்லே. தேன்மொழி - தேமொழி. இனி எனக்கு எந்தை எங்கு அருள் நல்கும் கொல் என்றுகொள்க. அங்கு - அக்கோயிலின் வழியில்.

11. பொ-ரை: வளர்தற்குரிய பிறை சூடிய பெருமானை நீண்ட கூந்தலை உடைய பார்வதியோடு இணைத்துப்பாடி, வீணாகக் கழிக்கப் படாத தொரு காலத்தைக் காணும் பொருட்டுக் கடைவாயிலின்கண் நிற்கும் அடியேன், எல்லையற்ற அன்போடு ஐயாற்றை அடையும்