| 29. | முற்பிறைக் கண்ணியி னானை மொய்குழ லாளொடும் பாடிப் | | பற்றிக் கயிறறுக் கில்லேன் பாடியும் ஆடா வருவேன் | | அற்றருள் பெற்றுநின் றாரோ டையா றடைகின்ற போது | | நற்றுணைப் பேடையொ டாடி நாரை வருவன கண்டேன் | | கண்டே னவர்திருப் பாதங் கண்டறி யாதன கண்டேன். | | 9 |
யில் துயிலெழுந்து எம்பெருமானுக்கு உகப்புடையனவாகப் பெறப்படும் மலர்களைக் கொய்துவரும் அடியேன், சிறந்தஅணிகலன்களையும் பொன்னையும் மணியையும் கரையில் சேர்க்கும் காவிரியின் வடகரையில் அமைந்த ஐயாற்றை அடையும்போது, பெரிய ஆண் மான் தன் பெடையோடு இணைய இரண்டுமாக இணைந்து வருவனவற்றைக் கண்டேன். அவற்றை அடியேன் சக்தியும் சிவமுமாகக் கண்டதனால் திருப்பாதம் சிவானந்தம் ஆகிய முன் கண்டறியாதவற்றைக் கண்டேன். கு-ரை: பெரும்புலர்காலை:-(தி.4 ப.31. பா.4) கொய்யா - கொய்து. செய்யா என்னும் வாய்ப்பாட்டு இறந்தகால வினையெச்சம். அருங்கலம்- பண்புத்தொகை. (யாப்பருங்கலம்). அரிய பூண். விலை மதிப்பருமை, பெறலருமை முதலியன கொள்க. கலமும் பொன்னும் மணியும் உந்தும் ஆறு. கலை - ஆண் முசு. கருங்குரங்கு. 9. பொ-ரை: அமாவாசையை அடுத்து ஒருகலையினதாய் முற்பட்டுத்தோன்றும் பிறை சூடிய பெருமானைச் செறிந்த கூந்தலை உடைய பார்வதியோடும் இணைத்துப்பாடி, அவன் திருவடிகளைப் பற்றி உலகினோடு உள்ள பாசத்தைப் போக்கிக் கொள்ள முடியாத அடியேன், பாடிக்கொண்டும் ஆடிக்கொண்டும் வந்த எம்பெருமானுக்கே அற்றுத் தீர்ந்து அவன் அருள் பெற்று நிலவும் அடியார்கள் உடன் ஐயாற்றை அடையும்போது, சிறந்த துணையாகிய பெடையோடு ஆண் நாரைகள் கூட இரண்டுமாக இணைந்து வருவனவற்றைக் கண்டேன். அவற்றை அடியேன் சக்தியும் சிவமுமாகக் கண்டதனால் திருப்பாதம் சிவானந்தம் ஆகிய முன்கண்டறியாதவற்றைக் கண்டேன். கு-ரை: முற்பிறை- தலைநாட் பிறை. மொய் - அடர்ந்த. பற்றிக் கயிறறுக்கில்லேன். கயிறு - பாசம். உன் திருவடியைப்பற்றி உலகினோடுள்ள பாசத்தை அறுக்கமாட்டேன். ‘பற்றுக பற்றற்றான் பற்றினை’ என்றதற்கமையப் பற்றி என்றார். ‘அப்பற்றைப் பற்றுக (இப்) பற்று விடற்கு’ என்றதற்கிணங்க கயிறு அறுக்கில்லேன் என்றார். பாசம் என்னும் வடசொற் பொருள் குறித்துக் கயிறு எனப்பட்டது.
|