| 27. | கடிமதிக் கண்ணியி னானைக் காரிகை யாளொடும் பாடி | | வடிவொடு வண்ண மிரண்டும் வாய்வேண் டுவசொல்லி வாழ்வேன் | | அடியிணை ஆர்க்குங் கழலான் ஐயா றடைகின்றபோது | | இடிகுர லன்னதொ ரேன மிசைந்து வருவன கண்டேன் | | கண்டே னவர்திருப் பாதங்கண்டறி யாதன கண்டேன். | | 7 |
| 28. | விரும்பு மதிக்கண்ணி யானை மெல்லிய லாளொடும் பாடிப் | | பெரும்புலர் காலை யெழுந்து பெறுமலர் கொய்யா வருவேன் | | அருங்கலம் பொன்மணி யுந்தும் ஐயா றடைகின்ற போது | | கருங்கலை பேடையொ டாடிக் கலந்து வருவன கண்டேன் | | கண்டே னவர்திருப் பாதங் கண்டறி யாதன கண்டேன். | | 8 |
7. பொ-ரை: விரும்பும் பிறை சூடிய பெருமானை மெல்லியலாள் ஆகிய பார்வதியோடும் இணைத்துப்பாடி, வைகறையில் துயில் எழுந்து எம்பெருமானுக்கு உகப்புடையனவாகப் பெறப்படும் மலர்களைக் கொய்துவரும் அடியேன், சிறந்த அணிகலன்களையும் பொன்னையும் மணியையும் கரையில் சேர்க்கும் காவிரியின் வடகரையில் அமைந்த ஐயாற்றை அடையும்போது, பெரிய ஆண்மான் தன் பெடையோடு இணைய இரண்டுமாக இணைந்து வருவனவற்றைக் கண்டேன். அவற்றை அடியேன் சக்தியும் சிவமுமாகக் கண்டதனால் திருப்பாதம் சிவானந்தம் ஆகிய முன் கண்டறியாதவற்றைக் கண்டேன். கு-ரை: கடி - விளக்கம். காரிகையாள் - நாய்ச்சியர். வடிவு - கண்ணுக்குத்தோன்றுவது. உருவுதோன்றாது; அதுகருத்துக்குத் தோன்றுவது. (தொல்காப்பியம்பொருள். 244.) வண்ணம்:- முற்பாட்டின்குறிப்பில் அறிக. வேண்டுவ வாய்சொல்லி - வேண்டுவனவற்றை வாயாற் சொல்லி. வேண்டுவது உள்ளம். சொல்வது வாய் (நா). ‘மெய் வாய் கண் மூக்குச் செவி’ என்புழி வரும் வாய் சுவையுணர்ச்சிக்குரியது. சொல்வதற்குரியது நாவே. இரண்டும் வாய் என வழங்கப்படும். அடியிணையில் கழலை ஆர்த்தல். வீரக் கழலை வலக்காலில் மட்டும் கட்டுதல் தொன்மையது. இடிகுரல் அன்னது - இடியோசை போலும் ஓசையது. இடிகுரல் - ஆறன்றொகை. 8. பொ-ரை: விளக்கம் பொருந்திய பிறை சூடிய பெருமானை மெல்லியலாள் ஆகிய பார்வதியோடும் இணைத்துப்பாடி, வைகறை
|