பக்கம் எண் :

47
 

“திருந்தா அமணர்தம் தீநெறிப்பட்டுத் திகைத்து முத்திதரும் தாள் இணைக்கே சரணம் புகுந்தேன் இப்போது அடியேன் பிறவாமல் வந்து ஆண்டுகொள்க”என்று விண்ணப்பம்செய்கிறார்.

தேசமெல்லாம் புகழும் மூன்றுதலங்கள்:

“தேயமெலாம் நின்று இறைஞ்சும் திருப்பாதிரிப்புலியூர்” என்று இத்தலத்தைப் போற்றுகின்றார் அப்பர். “திக்கெலாம் புகழும் திருநெல்வேலி உறை செல்வர்தாமே” என்கிறார் திருஞானசம்பந்தர். “தேசமெல்லாம் புகழ்ந்தாடும் கச்சித்திருஏகம்பம்” என்கிறார் மணிவாசகர்.

தேசமெல்லாம் நின்று இறைஞ்சும் திருப்பாதிரிப்புலியூரும், திக்கெலாம் புகழும் திருநெல்வேலியும், தேசமெல்லாம் புகழ்ந்து ஆடும் கச்சித்திரு ஏகம்பமும் தலங்களுள் சிறந்தனவாகக் கருதப்படுகின்றன என்பது இப்பெரியவர்கள் வாக்கினால் கொள்ளத்தக்கனவாய் உள்ளன.

திருவமர் தாமரை:

திரு அமர் தாமரையும், திருவளர் தாமரையும், பொருளால் ஒன்றே. சொல் மாற்றத்தால் பொருள் மாற்றமில்லை. அதேபோல சீர்வளர் செங்கழுநீரும் சீர்வளர் காவியும் சொல்மாற்றமேயன்றிப் பொருள் மாற்றம் இல்லை. இப்படி அப்பர் பாடியுள்ள பாடலுக்கும் மணிவாசகர் பாடியுள்ள கோவைப்பாடலுக்கும் சொல் மாற்றமின்றி பொருள் மாற்றமின்மை கீழ்க்காணும் அப்பர் திருவிருத்தத்திலும் கோவையிலும் காணலாம். தாமரை, காவிகள், கோங்கு, இவையெல்லாம் மணிவாசகர் (தி.8 திருக்கோவை.) கோவையில் கூறியதலைவிக்குக் கொள்ளப்படுகிறது. அப்பர் உமையம்மைக்குஏற்றிப் பாடியுள்ளார். இவ்விரு பாடல்களிலும் உள்ளஒப்புமை காண்க.

திருவமர் தாமரை சீர்வளர் செங்கழு நீர்கொணெய்தல்

குருவமர் கோங்கங் குராமகிழ் சண்பகங் கொன்றைவன்னி

மருவமர் நீள்கொடி மாட மலிமறை யோர்கணல்லூர்

உருவமர் பாகத் துமையவள் பாகனை யுள்குதுமே.

-தி.4 ப.97 பா.10