பாடல்களின் இறுதியில் விண்ணப்பம்செய்கிறார். “ஐயனை ஆரா அமுதினைநாம் அடைந்தாடுதுமே | அத்தனை ஆராஅமுதினை நாமடைந்தாடுதுமே” | - பா.1 |
“நண்ண அரியஅமுதினை நாம் அடைந்தாடுதுமே | ஐயனை ஆரா அமுதினைநாமடைந்தாடுதுமே” | - பா.6 |
“அருத்தனை ஆராஅமுதினை நாமடைந்தாடுதுமே” | - பா.10 |
ஆரா அமுது என்றால் தெவிட்டாத இனிமையான அமுதம் போன்றவன் என்பது பொருள். மூன்றாய் உலகம் படைத்துகந்தான்: ஈன்றாள் - மாதினியார், தந்தை - புகழனார், உடன் தோன்றியவர் - திலகவதியார் இம்மூவருடைய தோன்றும் துணைக்கொண்டே தோன்றியவர் அப்பர். இவருக்குத் தோன்றாத் துணையாயிருந்த திருப்பாதிரிப்புலியூர் பாடலேசுவரர், இவருக்கு தோன்றும் துணையாகிய இம்மூவரையும் படைத்தருளினான் என்று நன்றி உணர்வோடு போற்றுகிறார். பாடலம் என்பது பாதிரி மரத்தைக் குறிக்கும். பாதிரி மரத்தைத் தல விருட்சமாகக் கொண்ட தலம் பாதிரிப்புலியூர். தலவிருட்சம் பற்றிய பெயரே பாடலேசுவரர். தோன்றாத் துணைவர் என்பது அப்பர் வரலாற்றால் பெற்ற பெயராகத் திகழ்கிறது. 94ஆவது பதிகத்துள் விடையான் விரும்பி என் உள்ளத் திருந்தான் இனி நமக்கு இங்கு அவலம் அடையா. அருவினை சாரா, நமனை அஞ்சோம் (தி.4ப.94 பா.6) என்கிறார். கருவாய்க் கிடந்துன்கழலே நினையுங் கருத்துடையேன் | உருவாய்த் தெரிந்துன்ற னாமம் பயின்றே னுனதருளால் | திருவாய்ப் பொலியச் சிவாய நமவென்று நீறணிந்தேன் | ருவாய் சிவகதி நீபா திரிப்புலி யூரரனே. |
“பாதிரிப்புலியூர் அரனே நான்அடுத்த பிறவியில் புழுவாய்ப் பிறக்கினும் புண்ணியா உன்னடி என்மனத்தே வழுவாதிருக்க வரம்தரவேண்டும்” என்று வேண்டுகிறார்.
|