பக்கம் எண் :

45
 

இதனையே ஒன்றரைக்கண்ணன் என்று நகைச்சுவையாகக் கூறியுள்ளார். நகைச்சுவைபடக் கூறினாரேனும் தத்துவம் பொதிந்த சொல்.

முருகப்பெருமான் சிவபெருமானின் நெற்றிக் கண்ணினின்றே தோன்றினார். சிவபெருமானுக்கு ஆறுமுகம் உண்டு. ஐந்து முகம் எல்லோருக்கும் தெரிவது. அதோ முகமாகிய கீழ்நோக்கிய முகம் அறிஞர்கள் - ஞானிகட்கே தெரியும். எனவே ஆறுமுகங்களிலும் உள்ள நெற்றிக்கண்களினின்றும் ஆறு தீப்பொறிகளாகத் தோன்றியவரே முருகப்பெருமான். இத்தகு கருத்துள்ள பாடல் (தி.4 ப.86பா.7) காண்போம்.

இன்றரைக் கண்ணுடை யாரெங்கு மல்லை யிமயமென்னும்

குன்றரைக் கண்ணன்குலமகட் பாவைக்குக் கூறிட்டநா

ளன்றரைக் கண்ணுங்கொடுத்துமை யாளையும் பாகம்வைத்த

ஒன்றரைக் கண்ணன்கண் டீரொற்றி யூருறை யுத்தமனே.

ஆரா அமுது:

ஆரா அமுது என்றால் பலரும் ஐயங்கார், பெருமாள் சம்பந்தம் என்று கருதுகின்றனர். அப்பெயர் சிவபெருமானுக்கே உரியது. திருமால் நெறி சைவத்தினின்றும் பிரிந்தது. அதுமுதல் ஆரா அமுது. என்ற சொல்லை வைணவர்கள் அதிகம் பயன்படுத்தினர். அவர்கள் பயன்படுத்தவே சைவர்கள் விட்டனர். இதனால் விளைந்ததே இத்தவறான எண்ணத்திற்குக் காரணம்.1

“ஆர்கிலா அமுதை மறந்துய்வனோ”என்னும் அப்பர் வாக்காலும், “அம்மையே அப்பா ஒப்பிலா மணியே அன்பினில் விளைந்த ஆரமுதே” என்றும், ஆரா அமுதே அளவிலாப் பெம்மானே என்றும், கூறியுள்ள மணிவாசகர் வாக்காலும் தெளியலாம். மேலும் இந்நான்காம் திருமுறையில் திருவேதிகுடிக்கு உரிய “கையது காலெறி”என்னும் பதிகத்தில் (தி.4 ப.90) ஐந்து


1. பக்தவத்சலம் என்ற பெயரையும் அவ்வாறே வைணவப் பெயராகக் கருதுகின்றனர். பக்தனிடத்தில் வாத்சல்யம் உடையவன் என்பதே அப்பெயரின் பொருள். பக்தவத்சலேசுவரர் கோயில் என்னும் சிவன்கோயில் திருக்கழுக்குன்றத்தில் பெரிய கோயிலாக இன்றும் உள்ளது. இது மலைக்குக் கீழ் இருப்பதால் தாழக்கோயில் என்கின்றனர்.