பக்கம் எண் :

57
 

வரலாற்றைச் சுருங்கக் கூறியுள்ளார்கள். பாடலுக்குரிய பொருளையும் எழுதியுள்ளார்கள்.

பொருள் இன்னும் எளிய நடையிலே இருந்தால் அது எல்லார்க்கும் நன்கு பயன்படும். கற்றவர் படித்தால் கல்லாதவரும் அதைக் கேட்டுத் தெரிந்து கொள்ளும் வகையில் பொருள் இருத்தல் வேண்டும். அதனால் பயனும் அதிகமாகக் கிட்டும் என்று மட்டும் குறிப்பிட விரும்புகின்றேன்.

சைவத்தைப் பரப்பும் வகையிலே இவர்கள் ஆற்றியுள்ள அருஞ் செயல்கள் பல. அவற்றினுள்ளே இவ்வாறான வெளியீடுகளையும் அவர்கள் மேற்கொண்டுள்ளது மிகவும் போற்றத்தக்கதாகும்.

தமிழ் உலகம், குறிப்பாக, சைவப் பெருமக்கள் இவர்களின் இந் நன்முயற்சியைப் போற்றி வாழ்த்துவர் என்பதிலே ஐயமில்லை.

அவர்களின் தமிழ்த் தொண்டும், சைவத் தொண்டும் பன்னெடுங் காலம் வாழ வேண்டும் என்று இறைவனை வேண்டுகிறேன்.

சென்னை

எம். பக்தவத்ஸலம்

25.03.1958