உ சிவமயம் முதல் பதிப்பின் அணிந்துரை 1ஸ்ரீமத். சம்பந்த சரணாலய சுவாமிகள் கோயம்புத்தூர். திருக்கயிலாய பரம்பரைத் திருத்தருமை ஆதீனம் 25 ஆவது பட்டத்தில் எழுந்தருளி அருளாட்சி புரியும் குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ சுப்பிரமணிய தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் அவர்கள் செய்துவரும் சைவப் பெருந் திருத்தொண்டுகள் மிகப்பலவாம். தேவாலய மடாலய பரிபாலனம், தேவார பாடசாலை, சிவாகம பாடசாலை, செந்தமிழ்க்கல்லூரி, ஞானசம்பந்தம் என்னும் மாதாந்த சஞ்சிகை, தேவார அருட்பாசுரங்களின் வெளியீடு முதலியனவாய் அவை எண்ணிறந்து விளங்குவனவாம். அவற்றுள் தலைசிறந்தது தேவாரத் திருமுறைகளை உரையுடன் வெளியிடுதலாகும். சைவத் தெய்வத் திருமுறைகள் பனிரண்டனுள் தேவாரங்கள் முதலேழு திருமுறைகளாக வகுக்கப்பெற்றவை. திருஞானசம்பந்த சுவாமிகள் தேவாரங்களாகிய முதன்மூன்று திருமுறைகளை உரையுடன் முன்னமே வெளியிட்டுள்ளார்கள். 4, 5, 6 திருமுறைகளாகத் திருநாவுக்கரசு சுவாமிகள் தேவாரங்கள் வகுக்கப்பெற்றுள்ளன. 4-ஆம் திருமுறை பண்களும், திருவிருத்தமும், திருநேரிசையும், 5-ஆம் திருமுறை திருக்குறுந்தொகைகளும், 6-ஆம் திருமுறை திருத்தாண்டகமும் கொண்டன. 4-ஆம் திருமுறை இப்போது உரையுடன் வெளியிடப்
1. கோவை. திரு. சி. கே. சுப்பிரமணிய முதலியார் அவர்களே ‘சம்பந்த சரணாலயர்’, என்னும் இத் தீட்சாநாமம் உடையவர்கள்.
|