ணம்) என்ன? அவ்வடி எங்கள் தருமைக் குருமணியின் திருவடியே ஆகும். “குருவே சிவம்எனக் கூறினன் நந்தி குருவே சிவம்என் பதுகுறித் தோரார் குருவே சிவனுமாய்க் கோனுமாய் நிற்கும் குருவே உரைஉணர் வற்றதோர் கோவே” என்னும் திருமந்திரம் குருவே சிவம், குருவே கோ என்று உணர்த்துவதை அறியாதார் ஆர்? “சிவனை வழிபட்டார் எண்ணிலி தேவர் அவனை வழிபட்டு இங்கு ஆம்ஆறு ஒன்றுஇல்லை அவனை வழிபட்டுஅங்கு ஆம்ஆறு காட்டும் குருவை வழிபடின் கூடலும் ஆமே” என்னும் திருமந்திரம் தேவர்கள் சிவனை வழிபட்டுப் பெறாத நலத்தைக் குருவை வழிபட்டுப் பெறலாம் நாம் என்கின்றது. எனவே, குருவருள் கிடைக்கப்பெற்றதொன்றே திருவருட் பணி செய்யும் இத் துணிவுக்கு ஏதுவாயிற்று என்பதை மறுக்கத் துணிவார் யாவர்? இத் துணிவு குருவருளால் வரப்பெற்றேன் ஆதலின் செருக்கிற்குச் சிறிதும் ஆளாகாதுய்ந்தேன். “திருநாவுக் கரசுவளர் திருத்தொண்டின் நெறிவாழ வருஞானத் தவமுனிவர் வாகீசர் வாய்மைதிகழ் பெருநாமச் சீர்பரவ லுறுகின்றேன் பேருலகில் ஒருநாவுக் குரைசெய்ய ஒண்ணாமை உணராதேன்” என்று அருளிய அருண்மொழித்தேவர் அருண்மொழியை அகத்துட் கொண்டே இக் குறிப்பெழுதினேன். இந் நாலாந்திருமுறையின் பொருட்குறிப்பெழுதுந் திறத்தில் அடியேன் உற்ற இடர்ப்பாடுகளுக்கு அளவில்லை. ‘களவு படாததோர் காலம் காண்பான் கடைக்கணிக்கின்றேன்’ (பா.31) என்றதன் பொருள் நன்கு புலப்பட்டிலது. கடைக்கணித்தல் (கடைக்கண்ணால்நோக்கி யருளுதல்) சிவன் சீவனுக்குச் செய்யலாம். சீவன் சிவனுக்குச் செய்யலாமோ? அது
|