பக்கம் எண் :

65
 

ஆகவே, அவ்விரண்டு திறத்து நூல்களையும் உரிய காலங்களில் வெளியிடும் அருட்பணியை இத்தருமை ஆதீனம் கடைப்பிடித்துச் செய்துவருகின்றது.

25ஆவது பட்டம் குருமகாசந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ சுப்பிரமணிய தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் அவர்கள், அத் திருமுறைகளைக் குறிப்புரையுடன் வெளியிட்டு வழங்குவது சாலச் சிறந்தது என்று திருவுளங்கொண்டு, முதல் மூன்று திருமுறைகளையும் அரும் பெருங் குறிப்புரைகளுடன் வெளியிடச் செய்து, உலகர்க்கு அருள்நூற் கொடையாக நல்கியருள்கின்றார்கள். ஒவ்வொன்றும் ஐந்தாயிரம் (5000) படிகள் அச்சிடப்பெற்றுள்ளன.

இந் நாலாந் திருமுறைக்குக் குறிப்புரை எழுதுக என அடியேனைப் பணித்தருளினார்கள். அவ்வருளைப் பெறப் பல பிறவிகளிற் செய்த தவத்தின் பயன் காரணம் என்று கருதி அளவிலாக்களிப்பெய்தினேன். எய்தினும், அடியேன் அறிவுக்கும் அப்பர் அருளிய அருமுறைப் பொருளுக்கும் எள்ளளவேனும் அணிமை உண்டோ? திருஞானசம்பந்தக்கண்ணுடைய வள்ளலார் அருளிய சிவாநந்த மாலை (பா.6)யில்,

“சொற்கோவும் தோணிபுரத் தோன்றலும்எம் சுந்தரனும்
சிற்கோல வாதவூர்த் தேசிகனும் - முற்கோலி
வந்திலரேல் நீறெங்கே? மாமறைநூல் தான்எங்கே?
எந்தைபிரான் ஐந்தெழுத்தெங் கே?”

என்று அவ்வருட்சான்றோர் வினாவியருளினார். அடியேனும் இக்கருத்திற்கு ஏற்ப,

“நாவுக் கரசர் நவின்ற திருவருளின்
பாவுக் கரசெங்கே? பாவியேன் - கூவுக்
கணுகாத பெம்மான்அருள் எங்கே? எங்கே
நுணுகாத என் அறிவின் நோக்கு?”

என்று வினாவி அமைகின்றேன். அத் திருவெண்பாவிலே, முதற்கண், ‘சொற்கோ’ வேதோன்றுகின்றார். ‘நாவரசு’ என்னும் பொருளதே அதுவும். அத்தகு மாண்பு மிக்க அருட் செல்வர் திருப்பாடலின் பொருளை அறியவும் குறிப்பு வரையவும் துணிவுண்டாமோ? என் புல்லறிவு நல்லறிவாளர்க்குத் தெற்றெனப் புலப்படினும் படுக என்னும் ஒரு துணிவு தோன்றித் தானே எழுதியுள்ளேன்? அதற்கு அடி (கார