எல்லாவற்றுக்கும் மூலமான வள்ளலாகத் திகழ்கிறார். வடக்கே கைகாட்டும் வள்ளல் வள்ளலார் கோயில், கிழக்கே துறைகாட்டும் வள்ளல் - விளநகர், தெற்கே மொழிகாட்டும் வள்ளல் - பெருஞ்சேரி, மேற்கே வழிகாட்டும் வள்ளல் மூவலூர். வேறு ஒருவராலும் வழங்கமுடியாத வீடுபேற்றை, மோட்சத்தை வழங்குபவர் எவரோ அவரே வள்ளல் எனப்படுவார். மற்றவர்க்குச் சொல்வதெல்லாம் உபசாரமே. சிவபெருமான் ஒருவரே வீடு அளிப்பவர் ஆதலின் இவர்க்கு வள்ளல் என்ற பெயர் வந்தது. அப்பாடல் காண்க. |
கொள்ளும் காதன்மை பெய்துறும் கோல்வளை உள்ளம் உள்கி உரைக்கும் திருப்பெயர் வள்ளல் மாமயி லாடுது றைஉறை வெள்ளம் தாங்கு சடையனைவேண்டியே. | |
தி.5 ப.39 பா.1 |
அஞ்சொலாள்: |
இத்தலக் குறுந்தொகை நான்காம் பாடலில் கொடிய கோபமுடைய காலன் நம்மிடம் வரமாட்டான். அஞ்சத்தக்க இறப்பும் பிறப்பும் அறுக்கலாம், எப்பொழுது? அஞ்சொலாள் உமை பங்கன் அருளினால் காலனைக் கடக்கலாம், பிறப்பினையும் இறப்பினையும் அறுக்கலாம் என்று அருளியுள்ளார். அஞ்சொலாள்- அழகிய இனிய சொல்லை உடையவள் அம்மை. இதனைப் பின்னர் வந்தோர் அஞ்சலாள் எனக்கொண்டு இவ்வூர் அம்மை பெயரை ''அபயாம்பிகை'' என மொழி பெயர்த்தனர். எப்பெயரும் இறைவிக்கு ஏற்றதே. எனினும் உண்மை காண்டல் உலகினுக்கு இனியதே என்க. |
நிலைமை சொல்லு: |
கயிலாய நன்மலையன் மாமயிலாடுதுறையன் நம் தலையின் மேலும் மனத்துளும் தங்க நெஞ்சே தவம் என் செய்தாய்? நிலைமை சொல்லு என்று வினவுகிறார். அந்த பாடல் வருமாறு. |
நிலைமை சொல்லுநெஞ் சேதவம் என்செய்தாய் கலைக ளாயவல் லான்கயி லாயநன் மலையன் மாமயி லாடு துறையன்நம் தலையின் மேலும் மனத்துளும் தங்கவே | |
-தி,5 ப.39 பா.6 |
குழலின் நேர்மொழி: |
நான்காம் திருமுறையில் திருவாரூர்த் திரு நேரிசையில் ''குழல் வலம் கொண்ட சொல்லாள்'' என்ற அரிய பிரயோகம் உள்ள பாடலை முன்பு கண்டோம். இங்கு ஐந்தாம் திருமுறையிலும் திருக்கழிப்பாலை "வண்ணமும் வடிவும்" என்ற பதிகத்தின் மூன்றாம் பாடலில் இரண்டாம் அடியில் "குழலின் நேர்மொழி கூறிய கேண்மினோ" |