பக்கம் எண் :

14ஸ்ரீலஸ்ரீ குருமகாசந்நிதானத்தின் ஆசியுரை(ஐந்தாம் திருமுறை)

பேர்கள் தான் பலவாக உள்ளன என்று இங்கு தெரிவித்துள்ளார். அப்பாடல் வருமாறு.
அருவ ராததோர் வெண்டலை யேந்திவந்து
இருவ ராயிடு வார்கடை தேடுவார்
தெருவெ லாமுழல் வார்செம்பொன் பள்ளியார்
ஒருவர் தாம்பல பேருளர் காண்மினே.

-தி. 5ப. 36பா. 4

     ஒருவர் தாம் பல பேருளர் என்பதற்கு உலகியலிலும் சில உதாரணங்கள் கண்டு தெளியலாம். காவிரி ஒன்றுதான்; பலவாகப் பிரிந்து பலபேர் தரித்து பலருக்கும் பயன் தருகிறது. இந்தியா ஒன்றுதான்; பல மாநிலங்களாகப் பேர் பெற்று பலவாகப் பிரிந்து பலருக்கும் பயன் தந்து நிற்கிறது. இதுபோல் இன்னும் பல உதாரணங்களும் காணலாம்.
பாவமும் பிழையும் தீர்ப்பர்:
     கடவூர் மயானப்பெருமானை ஞானசம்பந்தர் "வரிய மறையார்" என்னும் பதிகத்துள் ஒவ்வொரு பாடல் இறுதியிலும் "பெரிய பெருமான் அடிகளே" என்றும் "எம்பெருமான் அடிகளே" என்றும் குறிப்பிட்டுள்ளமை காணலாம். இங்கு நாவுக்கரசர் "குழைகொள் காதினர்" என்று தொடங்கும் பதிகத்துள் ஒவ்வொரு பாடலின் இறுதியிலும் "பெருமான் அடிகள்" என்று குறிப்பிட்டிருப்பதும் சிந்தித்தற்குறியது. பழைய அடியார்கள் செய்த பாவத்தையும் பிழையையும் தீர்ப்பர் என்றும், பரவுவார் இடர் தீர்த்துப் பணி கொள்வார் என்றும் இப்பதிகத்துள் குறிப்பிட்டுள்ளார். அப்பாடல் பகுதிகளைக் காண்க.
"பழையதம் அடியார் செய்த பாவமும்
பிழையும் தீர்ப்பர் பெருமான் அடிகளே"

-தி. 5ப. 38பா. 1

"பரவுவார் இடர் தீர்ப்பர் பணிகொள்வர்
பிரமன் மாற்கும் பெருமான் அடிகளே"

-தி. 5ப. 38பா.8

மயிலாடுதுறைப் பதிகம்:
    "கொள்ளும் காதன்மை" எனத்தொடங்கும் திருப்பதிகம் அகத்துறைப்பாடல்கள் பதினொன்றைக் கொண்டது. முதற்பாடலில் பெருமான் மீது காதல்கொண்ட பெண் ஒருத்தி பெருமானைக் கண்டபோதெல்லாம் உள்ளம் உருகுவதால் உடல் மெலிகிறாள். கையில் பெய்யும் வளையல்கள் கழல்கின்றன. பெருமான் பெயராகிய வள்ளலையே உரைத்தவண்ணம் உருகுகின்றாள், என்கிறார். இங்குள்ள பெருமான் வள்ளலாய் வீற்றிருக்கின்றார். நாற்றிசையிலும் நான்கு விதமாக வண்மை வழங்கும் பெருமான் இங்கு நடுநாயகமாக