(ஐந்தாம் திருமுறை) | ஸ்ரீலஸ்ரீ குருமகாசந்நிதானத்தின் ஆசியுரை | 17 | |
| உடுத்தவன் - நிர்வாண கோலத்தன், அவனை அடைதலே நமக்கு நன்மை எல்லாம் பயக்கும் என்கிறார். | மேலும் "நமக்கு நல்லது நல்லம் அடைவதே" என்றும் " பரவுமின் பணிமின், பணிவார் அவரோடே விரவுமின் விரவாரை விடுமினே" என்றும் "வல்லவாறு சிவாய நமவென்று தொழ, வெல்ல வந்த வினைப்பகை வீடுமே" என்றும் "நல்லம் நல்லம் எனும் பெயர் நாவினால் சொல்ல வல்லவர் தூநெறி சேர்வரே" என்றும் குறித்துள்ளமை கண்டு நாமும் தொழுவோம். தூநெறி - வீட்டு நெறி. | வஞ்ச ஆறுகள் வற்றின: | பஞ்ச பூதங்களும் மாயா காரியங்கள் இதனையே பஞ்சபூத வலை என்கிறார். இவ் வலையில் படாமல் தப்பவேண்டுமானால் பேரொளிப் பொருளாக பேரறிவுப் பொருளாக, பேரின்பப் பொருளாக உள்ள ஆமாத்தூர் அழகனை நெஞ்சினால் நினைதல் வேண்டும். நினைத்தால் வஞ்சனையாக உள்ள ஆறுகள் வற்றி விடும். அப்பர் நினைந்தார், வஞ்ச ஆறுகள் வற்றின. அவர் அனுபவப் பாடலைக் காண்போம். | பஞ்ச பூத வலையிற் படுவதற் கஞ்சி நானு மாமாத்தூ ரழகனை நெஞ்சி னால்நினைந் தேன்நினை வெய்தலும் வஞ்ச ஆறுகள் வற்றின காண்மினே | | -தி,5 ப,44 பா,4 | வஞ்சனையால் வரும் தீய வழிகள் பல, அவ்வழிகளெல்லாம் வற்றிப் போயின. ஆறு - வழி. மேலும் இத்தலப் பதிகத்தின் ஐந்தாம் பாடலில் "இராமனும் வழிபாடு செய் ஈசனை, நிரா மயன்தனை நாளும் நினைமினே" என்கிறார், நிராமயன் - நோய் இல்லாதவன், பசுத்துவம் இல்லாதவன். பிறவி அற்றவன். இராமன் வழிபட்ட இத்தல புராணக் குறிப்பை இப்பாடலில் குறிப்பிட்டுள்ளார். ஆமாத்தூர் இடமதாகக்கொண்ட ஈசனுக்கு என் உளம், இடமதாக்கொண்டு இன்புற்றிருப்பனே என்கிறார், ஆமாத்தூரில் குடிகொண்டுள்ள ஈசனை என் உள்ளத்தில் ஏற்றிப் பூசிப்பேன். போற்றுவேன் எனப் புளகாங்கிதம் கொள்கிறார். | கண்ணில் உண்மணி: | பண்ணில் ஓசையாகவும், பழத்தில் சுவையாகவும் இருப்பவன் இறைவன். பண் இராகம். ஓசை - சுரம். பண்வேறு. ஓசை வேறு என்றில்லாமல் உடல் உயிர் போல ஒன்றாய் இருப்பவன் என்பதை முதல் அடி உணர்த்துகிறது எனலாம். "பெண்ணோடு ஆணென்று பேசற்கரியவன் வண்ணமில்லி வடிவுவேறாயவன்" என்பது கண்ணொளியும் சூரிய ஒளியும் போல வேறாயிருந்து உதவும் | | |
|
|