தன்மையைக் காட்டுகின்றது எனலாம். "கண்ணில் உண்மணி கச்சிஏகம்பனே" என்பதில் கண் காண்பதற்கு உயிர் உடனாய் இருந்து காண்பதுபோல சிவன் உயிர்க்கு உயிராய் உடனிருந்து உணர்த்துவதைக் கடைசி அடி காட்டுகிறது. இறைவன் ஒன்றாய் வேறாய், உடனாய் இருந்து உதவுவதைக் குறிப்பிடுகிறது இப்பாடல். |
பொய்யர் உளத்தணுகான்: |
சிவன் பொய்யர் உள்ளத்திலும், வஞ்சகர் நெஞ்சத்திலும் உறையான் "பொய்யர் உள்ளத்து அணுகானே" என்பது அருணகிரியார் திருப்புகழ். பொய் அஞ்சி வாய்மைகள் பேசிப் புகழ் புரிந்தார்க்கே அருள் செய்வான் அரன் என்பது அப்பர் வாக்கு. பொய் மொழியா மறையோர்களும், மெய்மொழி நான்மறையோர்களும் துதித்துப் போற்றப்படுபவனே காழியிலும் வீழியிலும் வீற்றிருக்கும் பெருமான் என்கிறார் ஞானசம்பந்தர். நாவரசர் திருஏகம்பத்து இறைவனைத் தொழுது எழுந்தார். அப்போது ஏகம்பன் உணர்த்திய நல்லுணர்வை சொல்மாலையாக்கி ஏகம்பவாணர்க்கே சூட்டி மகிழ்கிறார். நாமும் அவ்வாக்கை உணர்ந்து உயர்வோம். |
பொய்ய னைத்தையும் விட்டவர் புந்தியுள் மெய்ய னைச்சுடர் வெண்மழு ஏந்திய கைய னைக்கச்சி ஏகம்பம் மேவிய ஐய னைத்தொழு வார்க்கில்லை அல்லலே | |
-தி.5 ப.48 பா.9 |
செந்தமிழ் உறைப்பு: |
அப்பர் திருமறைக்காட்டில் பத்துப் பாடல்கள் பாடியும் திருக்கதவு திறக்கவில்லை. பதினொராம் பாடலில் "இரக்கம் ஒன்றிலீர்" என்றதுமே கதவு திறந்தது. |
ஆனால் ஞானசம்பந்தரோ "சதுரம் மறைதான் துதி செய்து வணங்கும்" என்று ஒரு பாடல் பாடியமாத்திரத்தே திருக்கதவம் அடைத்துக் கொண்டது. |
அப்பர், இதில் நாம் ஏதோ பிழை செய்துவிட்டோம், என்று பிழையை எண்ணி எண்ணி நைந்தபோது, "திருவாய்மூருக்கு நம்பால் வருக" என அசரீரி தோன்ற, அப்பர் நள்ளிரவில் அங்குச் சென்றார். ஞானசம்பந்தர் அப்பர் வாய்மூர் செல்கிறார் என்பதை உணர்ந்து அவரும் அப்பரைப் பின் தொடர்ந்தார், இருவரும் திருவாய்மூர் சேர்ந்தனர். காட்சி ஒன்றும் கிடைக்கவில்லை. அப்போதுதான் அப்பர் "எங்கே யென்னை " என்ற திருக்குறுந்தொகைப் பதிகம் பாடினார். அதில் எட்டாம் பாடலில் திறக்கப்பாடிய என்னிலும் செந்தமிழ் உறைப்புப் பாடி அடைப்பித்தாராகிய ஞானசம்பந்தர் உந்நின்றார் என்றார். அணிமையிலும் இல்லாமல், |