பண்ணிக் கொடுத்தார் பாலைத்துறைப் பரமனார் என்கிறது இப்பாடல். அப்பாடலைச் சிந்திப்போம். |
விண்ணி னார்பணிந் தேத்த வியப்புறும் மண்ணி னார்மற வாதுசி வாயஎன்று எண்ணி னார்க்குஇட மாஎழில் வானகம் பண்ணி னார்அவர் பாலைத் துறையாரே | |
-தி. 5ப.51பா.6 |
நாவலந்தீவு: |
இமய மலையின் தென்பாலுள்ள இந்தியப்பெருநாட்டிற்கு நாவலந்தீவு என்று பெயர். நாடும் ஊரும் தோன்றுதற்கு முன்னர் இத்தீவு நாவல்மரக்காடாக இருந்தது. காடு திருத்தி நாடாக்கிய முயற்சியால் நாடும், நகரமும் நற்றிருக்கோயிலுமாக நாவலந்தீவு திகழ்கிறது. இதனை ஜம்புத்தீவு என்றும் வழங்குவர். ஜம்பு - நாவல். கும்பகோணத்திற்கு அண்மையில் உள்ள திருநாகேச்சுரத் திறைவனை, நாவலந்தீவில் வாழ்பவர்கள் எல்லோரும் 'வினையொடு பாவமாயின பற்றறுவித்திடலால்' இங்கு வந்து வணங்கி வழிபடுகின்றனர் என்கிறார் அப்பர். |
இராகு பூசித்து அருள்பெற்ற தலம் இது. இதனால் இராகுதோஷம் உடையவர்கள் ஞாயிற்றுக்கிழமை மாலை இராகுகாலத்தில் நூற்றுக்கணக்கான மக்கள் வழிபட்டு நலமுறுகின்றனர். இப்பாடல் காண்போம். |
நாவ லம்பெருந் தீவினில் வாழ்பவர் மேவி வந்து வணங்கி வினையொடு பாவ மாயின பற்றறு வித்திடும் தேவர் போல்திரு நாகேச் சரவரே. | |
-தி.5ப.52பா.2 |
எட்டு நாண்மலர்: |
எட்டு நாண்மலரை அட்டபுட்பம் என்பர் வடமொழியாளர். புன்னை, வெள்ளெருக்கு சண்பகம், நந்தியாவர்த்தம், பாதிரி, குவளை, அலரி, செந்தாமரை என்பன அவ் எண் மலர்களாம். அகப்பூசைக்குரிய எண்மலர்களாவன. கொல்லாமை, அருள், பொறியடக்கல், பொறை, தவம், வாய்மை, அன்பு, அறிவு என்பனவாம் இதனை நலஞ்சிறந்தார் மனத்தகத்து மலர்கள் எட்டும் என்பார் அப்பர். |
எட்டு நாண்மலர் கொண்டவன் சேவடி மட்ட லரிடு வார்வினை மாயுமால் கட்டித் தேன்கலந் தன்ன கெடிலவீ ரட்ட னார்அடி சேரும் அவருக்கே | |
-தி.5ப.54பா.1 |
என்னும் இத்திருப்பதிகம் திருவதிகை வீரட்டானத்திறைவரைப் |