| கல்வெட்டுப் பகுதியால் விளங்கும். |
| எழுந்தருளுவித்த பிரதிமைகள்: |
| "பூமருவிய திருமாதும் புவிமாதும் நாமருவிய கலைமாதும் புகழ்மாதும்" எனத் தொடங்கும் மெய்க்கீர்த்தியையுடைய கோப்பரகேசரிபன்மரான திரிபுவனச்சக்கரவர்த்திகள் இராஜராஜ தேவரின் பன்னிரண்டாம் ஆட்சியாண்டில் திருவலஞ்சுழி உடையார் திருமடைவளாகத்தில் இருந்த தேவரடியார் ஆட்கொண்டாள் தேவும் திருவும் உடையாளும், கீழ்க்கடைநின்றாளும் ஆகிய இருவரும் இக்கோயிலில் திருநாவுக்கரையதேவர், திருவாதவூராளி, திருக்கண்ணப்பதேவர் இவர்களை எழுந்தருளுவித்து இவர்களின் வழிபாட்டிற்கு நில நிவந்தம் செய்துள்ளனர். |
| சிறப்பு நாள்கள்: |
| இக்கோயிலில் திருவாதிரைநாளுக்கும் தைப்பூசத் திருநாளுக்கும் வேண்டும் செலவினங்களுக்கு இரண்டாம் இராஜேந்திர சோழன் நிலம் அளித்திருந்தான். அந்நிவந்தத்தை அம்மன்னன் கங்கைகொண்டசோழன் திருமாளிகையில் திருமஞ்சன சாலையில் பள்ளிப்பீடம் காலிங்கராசனில் எழுந்தருளியிருந்து விட்டதாக அவனுடைய கல்வெட்டு குறிப்பிடுகின்றது. |
| பள்ளியறைநாச்சியாரைப் பற்றிய குறிப்பு: |
| பள்ளியறையில் எழுந்தருளியிருக்கும் இறைவியார் திருப்பள்ளியறை பெரியநாச்சியார் என்னும் பெயரால் குறிக்கப் பெற்றுள்ளனர். இவர் திருமுன்பு எரிவதற்கு ஐந்துநிலைத் தராகுத்து வளக்குக்கள் இரண்டினை, திரிபுவனச்சக்கரவர்த்தி இராஜாதிராஜ தேவர் காலத்தில் ஜயங்கொண்டசோழமண்டலத்து ஆமூர்க் கோட்டத்துச் சிறுகுன்றைநாட்டுக் காரிகைக் குளத்துளான் பெருமான் நம்பி ஆளுடையானான செயதரப்பல்லவரையன் கொடுத்துள்ளான். |
| திவலஞ்சுழியுடையார் தேவதானங்கள்: |
| கோப்பரகேசரி வன்மர்க்கு யாண்டு பன்னிரண்டாவதில் இன்னம்பர்நாட்டுத் தத்தங்குடி; ஒதியநத்தங்குடிப்பால் அழகத்துவப் பேறு இவ்விடங்களில் மூவேலியும், இராஜராஜதேவரின் இருபத்தொராம் ஆண்டில் இன்னம்பர்நாட்டு நாவற் குடிப்பால் நங்கையார் |