| நிலம் மூவேலி ஆக ஆறு வேலி நிலங்கள் தேவதானமாக விடப்பட்டிருந்தன. |
| வெள்ளைப் பிள்ளையார்: |
| திருவலஞ்சுழியின் சனத்தொகை குறைந்துகொண்டேவந்தது. ஆகையால் ஊரின் நலங்கருதி வெள்ளைப் பிள்ளையார்க்கு திரிபுவனச்சக்கரவர்த்தி இராஜராஜதேவரின் பதினான்காம் ஆண்டில் நிலம் விடப்பட்டது. மற்றும் இப்பிள்ளையார்க்கு அளிக்கப்பெற்ற நிவந்தம் பலவாகும். |
| இவ்வூரைத் தன்னகத்துக் கொண்ட நாடு: |
| "உய்யக்கொண்டார் வளநாட்டுப் பாம்பூர்நாட்டுத் திருக்குட மூக்கின்கால் திருவலஞ்சுழி" எனக் குறிக்கப்பெற்றிருப்பதால் இவ்வூர் உய்யக்கொண்டார்வளநாட்டுப் பாம்பூர்நாட்டுக்கு உட்பட்டிருந்தது என்பதை அறியலாம். |
| பிற செய்திகள்: |
| முதலாம் இராஜராஜசோழன் 'சிவபாதசேகரன்' என்னும் பட்டம் பெற்றிருந்ததை இக்கோயிலிலுள்ள அவனுடைய இருபத்தொராம் ஆண்டுக் கல்வெட்டு உணர்த்துகிறது. முதலாம் இராஜராஜதேவர் திருமகளார் விமலாதித்ததேவர் மகாதேவியார் ஸ்ரீ குந்தவை நங்கையார், நடுவில் பெண்பிள்ளைநங்கையார் மாதேவடிகளார் இவர்கள் இருவர்களின் பெயர்களும் இவ்வூர்க் கல்வெட்டில் காணக்கிடக்கின்றன.1 |
| 67.திருவன்னியூர் |
| அன்னூர் என்று இக்காலம் வழங்கப் பெறும் இத்தலம், தஞ்சை மாவட்டத்தில் திருவீழிமிழலைக்கு வடமேற்கே மூன்று கி. மீ. தொலைவில் உள்ளது. |
|
1 See the Annual Reports on South Indian Epigraphy for the years 1902,1928 Numbers 618-634,192-213. See also the South Indian Inscriptions,Volume VIII Numbers 215-238. |