பக்கம் எண் :

228தலங்களின் வரலாற்றுக் குறிப்புக்கள்(ஐந்தாம் திருமுறை)

     இறைவர் பெயர்: அக்கினீச்சுவரர்.
     இறைவி பெயர்: பார்வதியார்.
     தீர்த்தம்: அக்கினி தீர்த்தம்.
     அக்கினி பூசித்த தலம்.
     அப்பர் அருளிய பதிகம் ஒன்று மட்டும் உளது.

68.திருவாஞ்சியம்

     இலக்குமியை வாஞ்சித்து (விரும்பி)த் திருமால் பூசித்த தலமாதலின் இப்பெயர் பெற்றது.
     மயிலாடுதுறை - பேரளம் தொடர்வண்டிப் பாதையில், நன்னிலம் தொடர்வண்டி நிலையத்திற்கு மேற்கே 9 கி.மீ.தூரத்தில் இருக்கிறது. காவிரித்தென்கரைத் தலங்களுள் 70-ஆவது ஆகும். நன்னிலத்திலிருந்து பேருந்துகளில் செல்லலாம்.
     இறைவர் திருப்பெயர் வாஞ்சியநாதர். இறைவியார் திருப்பெயர் வாழவந்தநாயகி.
     தீர்த்தம் குப்த கங்கை. இது கோயிலுக்கு வடபால் இருக்கிறது. கார்த்திகை ஞாயிறு நாள்களில் மக்கள் விசேடமாக நீராடுகின்றனர்.
     தலவிருட்சம் சந்தனமரம். இது பிராகாரத்தில் இருக்கின்றது.
     இயமன் பூசித்துப் பேறுபெற்றான். இத்தலத்தில் இறப்பவர்களுக்கு இயமவாதனை இல்லை. இயமனுக்குத் தனிக் கோயிலும் இருக்கின்றது. இது முத்தியளிக்கும் தலங்களுள் ஒன்றாகும். இது மூவராலும் பாடப்பெற்றது. மூன்று பதிகங்கள் இருக்கின்றன.
கல்வெட்டு:
     இக்கோயிலில் இருபத்தேழு கல்வெட்டுக்கள் படி எடுக்கப்பட்டிருக்கின்றன. அவைகளில் ஏழு பிற்காலச் சோழர்களது. ஏழு பாண்டியர்களுடையனவும், ஒன்று நாயக்கரதுமாம். திருவாஞ்சியம் குலோத்துங்க சோழவளநாட்டில் பனையூர் நாட்டில் திருவாஞ்சியம் எனக் கூறப்பட்டது. இவ்வூருக்கு இராஜகம்பீர சதுர்வேதி மங்கலம்