பக்கம் எண் :

(ஐந்தாம் திருமுறை)தலங்களின் வரலாற்றுக் குறிப்புக்கள்229

     என்ற மறுபெயர் உண்டு. நிலவிற்பனை, நிலதானம் வரி தள்ளுபடி இவைகளைப் பற்றிக் கல்வெட்டுக்கள் குறிக்கின்றன. இரண்டாம் இராஜராஜதேவன் கல்வெட்டு ஒன்று கோயிலில் சேர்ந்த நிலங்களின் வரிசையைக் கூறுகிறது. இவ்வரசன் காலத்தில் அம்மனுக்கு ஒரு கோயில் கட்டப்பட்டு, பிரதிஷ்டையும் செய்யப்பட்டது. அப்போது நிலமும் வீடும் தானம் செய்யப்பட்டன.இறைவர் பெயர்: அக்கினீச்சுவரர்.
     குலோத்துங்கன் காலத்தில் திருப்பள்ளியறை நாச்சியாருக்குக் கோமாங் குடியான் ஒருவன் நிலதானம் செய்தான். மங்களாம்பாள் கோயிலில் உள்ள ஒரு கல்வெட்டின்படி,இராஜராஜதேவன் ll காலத்தில் (கி. பி.18) திரவாஞ்சியமுடையார் கோயிலில் அம்மனுக்கு ஒரு கோயில்கட்டிப் பிரதிட்டை செய்யப்பட்டது. அப்போது நிலம் வீடுகள் தானம் செய்யப்பட்டன. ஒரு நிலத்தில் இருந்த கல்வெட்டின்படி, சிதம்பரத்துப் பிச்சை மடத்து அகோர சிவாசாரியார் சீடர் அச்சுற்ற மங்கலத்துப் பெருமாநாயனார் பண்டாரம் அம்மடத்திற்கு முண்டு வான்சேரியில் ஒரு வேலி நிலம் வாங்கியதாகக் கூறப் பெற்றுள்ளது.

69. திருவாட்போக்கி

     இரத்தினகிரி என இக்காலம் வழங்கும் இவ்வூர், திருச்சி மாவட்டத்தில் குளித்தலை தொடர்வண்டி நிலையத்திலிருந்து 10 கி.மீ. தொலைவில் உள்ளது.
     மாணிக்கம் வேண்டிவந்த வடநாட்டு வேந்தன் ஒருவனுக்கு இறைவன் நீர்த்தொட்டி ஒன்றைக் காட்டி அதைக் காவிரி நீரால் நிரப்பும்படிக் கட்டளையிட, வேந்தன் முயன்றும் முடியாதது கண்டு,
இறைவன்மீது தன் வாளை ஒச்ச, இறைவர் அவ்வாளைப்போக்கி இரத்தினம் கொடுத்த காரணத்தால் வாட்போக்கி என்னும் பெயர் பெற்றதென்பர்.
     இறைவர் பெயர்: இரத்தினகிரிநாதர். இறைவி பெயர்: சுரும்பார்குழலியம்மை.
     தீர்த்தம்:- காவிரி.
     அகத்தியர், இந்திரன் முதலியோர் பூசித்துப் பேறெய்திய தலம். இங்கு அகத்தியர், உச்சிக்கால வழிபாடு (மத்தியான தரிசனம்) பெற்றபடியால், இங்கே உச்சிக்கால வழிபாடு சிறந்தது என்பர். சுவாமிக்கு மத்தியான சுந்தரர் என்ற பெயரும் உண்டு. இத்தலத்தை