| வழிபட வந்தவர் இங்கு இந்திரனால் உண்டாக்கப்பட்ட வேப்பமரத்தையும், இறைவரையும் வழிபட்டுத் திரும்பும்பொழுது வயிரவீரப்பெருமாள் என்னும் வீரவாகுவையும் வணங்கவேண்டும் என்று ஆன்றோர் கூறுவர். |
| அப்பர் அருளிய பதிகம் ஒன்று மட்டும் உண்டு. |
| கல்வெட்டு: |
| 1இத்திருக்கோயிலில் சோழமன்னர்களில் பரகேசரிவர்மரான உடையார் இராஜேந்திரதேவர் (கி.பி.1053-1063), முதற்குலோத்துங்க சோழதேவர், விக்கிரமசோழர், இரண்டாம் இராஜாதிராஜன், மூன்றாங்குலோத்துங்கன், மூன்றாம் இராஜராஜன் இவர்கள் காலங்களிலும்; பாண்டியமன்னரில் எம்மண்டலமும் கொண்டருளிய ஜடாவர்மன் சுந்தரபாண்டியன் l காலத்திலும்; விஜயநகரவேந்தர்களில் அரியண்ண உடையார் மகனாகிய விருப்பண்ண உடையார் I I வீரநரசிம்மபூபால மகாராயர், சதாசிவதேவ மகாராயர் காலங்களிலும்; ஹொய்சல அரசர்களில் வீரசோமேஸ்வரன், வீரராமநாதன் காலங்களிலும் பொறிக்கப்பெற்ற கல்வெட்டுக்கள் இருக்கின்றன. |
| இக்கல்வெட்டுக்களில் இறைவர் மாணிக்கமலை மகாதேவர், மாணிக்கமலை உடைய நாயனார், திருமாணிக்கமலை உடைய தம்பிரானார் என்னும் பெயர்களால் குறிக்கப்பெற்றுள்ளனர். இறைவியார் திருக்காமக்கோட்டமுடைய பெரிய நாச்சியார் என்னும் பெயரால் அழைக்கப்பெறுகின்றனர். |
| இவரை எழுந்தருளுவித்தவன் சிவபாதசேகரபுரத்து வணிகனாகிய திருஞானசம்பந்த நம்பி ஆவன். |
| வடகொங்கில் இராஜராஜபுரத்தில் இருந்த புகலூர் தாமோதரனான பிள்ளைக்கடியார் இக்கோயிலில் உள்ள திருப்பள்ளியறை நாச்சியாரை எழுந்தருளுவித்துள்ளார். |
| கோயிலில் தட்சிணாமூர்த்தி தேவரை எழுந்தருளுவித்து, சோபானங்களை (படிக்கட்டுகளை)க் கட்டியவர் சிவ பாதசேகரத்து |
|
| 1See the Annual Reports on South Indian Epigraphy for the year 1914 No. 144-191. |