பக்கம் எண் :

(ஐந்தாம் திருமுறை)தலங்களின் வரலாற்றுக் குறிப்புக்கள்231

வணிகனாகிய சிற்றம்பருடையான் காளி நல்லிசை யாளன் ஆவர்.
    இக்கோயில் ஆடவிடங்கப்பிச்சனால் கருங்கல்லால் கட்டப்பட்டுள்ளது என்பதை இக்கோயில் கல்வெட்டுப்பாடல் தெரிவிக்கின்றது.
    இக்கோயில் மண்டபம் சிவபாதசேகரபுரத்து நகரத்தாரால் கட்டப்பட்டது.
    சாத்தன் சேதிராயனின் அகம்படி முதலிகளில் ஒருவனாகிய கொங்கரைக்கொண்ட பல்லவரையன் இக்கோயில் மண்டபத்துக்குக் கதவுகளை இட்டதோடு வாசல்படிக் கட்டுகளையும் கட்டியுள்ளான். இவனே மலையின் அடிவாரத்தில் திருமடைவிளாகத்தையும் ஏற்படுத்தியுள்ளான்.
    இக்கோயிலில் வைகாசித் திருநாளுக்கும், மார்கழித் திருவாதிரைச் சிறப்புக்கும், சிவராத்திரி நாட்செலவுக்கும் நிவந்தங்கள் அளிக்கப்பெற்றிருந்தன. இறைவர்க்குத் திருமஞ்சனத்தின் பொருட்டு காவிரியிலிருந்து நீர் கொண்டு வருவதற்கு நிவந்தம் அளிக்கப்பெற்றது. விழாக்காலங்களில் இறைவரை மண்டபத்துக்கு எழுந்தருளப் பண்ணுங்கால் அவர்க்குத் திருவழுதுக்குச் சிவபாதசேகரநல்லூரில் இருந்த நாலூர் உடையான் நிலநிவந்தம் அளித்திருந்தான். தட்சிணாமூர்த்தி தேவாலயத்துக்கு சிவபாதசேகரபுரத்து வணிகனால் திருவமுதுக்கு இரண்டுமா நிலம் விடப்பட்டிருந்தது.
    முதற் குலோத்துங்க சோழனின்40 ஆவது ஆட்சியாண்டில் சிவபாத சேகரபுரத்துத் தென்மேற்கு வாசலில் இருந்த எழுநூற்றுவன் திருமடத்தில் தேவரடியார், சிவயோகி, தபசி இவர்கள் உண்பதற்கு வட கொங்கில் உள்ள இராஜராஜபுரத்தில் இருந்த புகலூர் தாமோதரனான பிள்ளைக்கடியார் நிவந்தம் அளித்திருந்தனர். முதற்குலோத்துங்க சோழனின் 47 ஆவது ஆண்டில் அபூர்விகளை அமுது செய்விப்பதற்கும் நிவந்தம் விடப்பட்டிருந்தது.

70. திருவாய்மூர்

     இது திருக்குவளை என்று இக்காலம் வழங்குகின்றது. திருக்கோளிலிக்குத் தென்கிழக்கே 3 கி.மீ. தூரத்தில் இருக்கின்றது. இது காவிரித் தென்கரைத் தலங்களுள் ஒன்றாகும். திருவாரூரிலிருந்து