| திருக்குவளை வழியாக வேதாரணியம் செல்லும் பேருந்துகளில் செல்லலாம். |
| இறைவர் திருப்பெயர் வாய்மூர்நாதர். இறைவியார் திருப்பெயர் பாலினுநன்மொழியாள். |
| தீர்த்தம் சூரியதீர்த்தம். இது கோயிலுக்கு எதிரில் இருக்கிறது. |
| தலவிருட்சம் பலா. |
| விடங்கர் எழுந்தருளியிருக்கும் தலங்கள் ஏழனுள் ஒன்று. இவர் நீலவிடங்கர், நடனம் கமலநடனம். சூரியன் பூசித்துப் பேறு பெற்றான். |
| சைவப் பெருமக்களாகிய அப்பரும், சம்பந்தரும் திருமறைக்காட்டில் எழுந்தருளியிருந்தபொழுது வாய்மூர் இறைவர் அப்பர் கனவில் தோன்றி "நாம் வாய்மூரில் இருப்போம் வா" என்றனர். உடனே அப்பர் விரைவில் எழுந்து இறைவரைத் தொடர்ந்து சென்றார். திருக்கோயிலுக்கு அருகில் சென்றதும் இறைவர் மறைந்துவிட்டனர். |
| இதற்குள் ஞானசம்பந்தரும் அங்கு எழுந்தருள, அப்பர், "கதவைத் திறக்கப்பாடிய என்னினும், செந்தமிழ் உறைப்புப் பாடி அதை அடைத்த ஞானசம்பந்தப் பெருந்தகையாரும் எழுந்தருளியுள்ளார். அவர்க்குக் காட்சியை அளிக்கவாவது வெளிப்பட்டருள வேண்டும்" என்றுபாட அவ்வாறே வாய்மூர் இறைவர் காட்சி தந்தருளினார். |
| இத்தலத்திற்குத் திருஞானசம்பந்தர் பதிகம் ஒன்றும் அப்பர் பதிகங்கள் இரண்டும், ஆக மூன்று பதிகங்கள் இருக்கின்றன. சுந்தரரும் "வாய்மூர் மணாளனை" என்கின்றார். |
| 71. திருவான்மியூர் |
| வான்மீகி முனிவர் வழிபட்டுப் பேறுபெற்ற தலமாதலால் வான்மியூர் என்னும் பெயர் எய்திற்று. வான்மீகி முனிவரின் செப்புப் பிரதிமை பிராகாரத்தில் இருக்கிறது. ஊருக்கு வடமேற்கே அவருக்குத் தனிக்கோயிலும் உண்டு. சென்னை மயிலாப்பூருக்குத் தெற்கே 5கி.மீ.தூரத்தில் இருக்கிறது. இறைவரின் திருப்பெயர் 1.மருந்தீசர், 2.பால்வண்ணநாதர். இறைவியின் பெயர் சொக்கநாயகி. இலிங்கத்தின் |