பக்கம் எண் :

236தலங்களின் வரலாற்றுக் குறிப்புக்கள்(ஐந்தாம் திருமுறை)

இருந்தது. அச்சபையார்க்குப் பெருங்குறிப் பெருமக்கள் என்று பெயர். அவர்கள் கூட்டம் கூடுவதற்குமுன் தட்டழிகொட்டிக் காளம் ஊதச் செய்து, நடுவில் ஸ்ரீ கோயிலான வினையாபரண விண்ணகரப் பெருமானடிகள் கோயிலின் முன்பில் கூட்டம் குறைவறக் கூடியிருந்து கோயில்காரியங்களைக் கவனித்துவந்தனர். இங்குள்ள கல்வெட்டு ஒன்று "வாழ்க அந்தணர்" என்று தொடங்கும் தேவாரப்பாடலுடன் தொடங்குகின்றது. இது பாராட்டற்குரியதாகும். இப்பாடலுக்கும் அச்சில் புத்தகத்தில் வெளிவந்த பாடலுக்கும் வேறுபாடு இல்லை.
    இக்கோயிலில் உள்ள முதலாம் இராஜராஜ சோழனின் மூன்றாமாண்டுக் கல்வெட்டில் "இவ்வொட்டோலைப்படியே கல்லில் வெட்டவும் சாசனம் செய்வித்துக் கொள்ளவும் பெறுவார் ஆக ஒட்டி இறைகாவல் ஒட்டோலை இட்டுக் குடுத்தோம்"என்னும் தொடர்கள் காணப்படுகின்றன1.
குறிப்பு:
     கொள்ளிடப்பேராற்றின் தென்கரையில் திருவைகாவூருக்குக் கிழக்கில் விசயமங்கை என்று ஒரு ஊர் இருக்கிறது. அங்கு ஒரு சிவன் கோயிலும் உண்டு. இதை விஜயமங்கை என்று கொண்டாரும் உண்டு. அது தவறாகும். இந்த விஜயமங்கையை சாதாரண மக்கள் விஷமூங்கி என்று அழைக்கின்றனர்.

73. திருவீழிமிழலை

     நாகை மாவட்டம் நன்னிலம் வட்டத்தில் உள்ளது. மயிலாடுதுறை - திருவாரூர் இருப்புப்பாதையில் பூந்தோட்டம் தொடர்வண்டி நிலையத்துக்கு மேற்கே 10 கி.மீ. தொலைவில் உள்ளது. திருவாரூர், மயிலாடுதுறை, கும்பகோணம் ஆகிய ஊர்களில் இருந்து பேருந்துகளில் செல்லலாம்.
    சோழவளநாட்டில் காவிரித்தென்கரையில் விளங்கும் 61 ஆவது தேவாரத்தலம்

    1இத்தொடர்களில் வரும் ஒட்டோலை என்பது இக்காலம் Agreement என்னும் பொருளில் இருப்பது நோக்கத் தக்கது.
     See the Annual Reports on South Indian Epigraphy for the year 1929, Numbers. 157-194.