| (ஐந்தாம் திருமுறை) | தலங்களின் வரலாற்றுக் குறிப்புக்கள் | 235 | |
| | மூன்றாம் ஆண்டுக் கல்வெட்டில் குறிக்கப்பெற்றுள்ளது. | | வழிபாடுகள்: | | இக்கோயிலில் அர்த்தயாமம் உள்பட நான்கு போதுகளில் வழிபாடுகள் நடைபெற்று வந்தன. இவ்வழிபாட்டுக் காலங்களில் திருவமுதுக்கு அரிசிக்கும், பொரிக்கறியமுது, புழுக்கறியமுது ஆக கறியமுது இரண்டுக்கும் நெய்யமுது, தயிரமுது, இவைகளுக்கும், அடைக்காய் அமுது வெறுங்காய் இவைகளுக்கும், சந்தனம், சந்தனக்குழம்பு, கற்பூரம் இவைகளுக்கும், ஆடி அருளப்பாலுக்கும், ஆடைக்கும், நுந்தாவிளக்குக்கள் ஐந்தினுக்கும், சிறுகாலை எட்டு, உச்சியம்போது எட்டு, இரவுக்குப் பதினான்கு சந்திவிளக்குக்களுக்கும் பிறவற்றிற்குமாக வடபிடாகை நெடுவாயிலிலும் இந்நெடுவாயிலைச் சுற்றிய பிடாகைகளிலும் உள்ள நிலங்களை நிவந்தங்களாக அம்பலவன் பழுவூர் நக்கனாகிய இராஜராஜப் பல்லவரையன் அளித்திருந்தான். | | எழுந்தருளுவித்த திருமேனிகள்: | | முதலாம் இராஜராஜசோழனின் ஏழாம் ஆண்டில் அம்பலவன் பழுவூர் நக்கனாகிய இராஜராஜப்பல்லவரையன் இத்திருக்கோயிலில் கூத்தப்பெருமாளையும், உமாபட்டாலகியையும் எழுந்தருளுவித்து, அவர்களுக்கு அணிகலன்களைக் கொடுத்துள்ளான். | | திருமடம்: | | இவ்வூரில் திருத்தொண்டத் தொகையன் திருமடம் ஒன்று இருந்ததை திரிபுவனச் சக்கரவர்த்தி இராஜராஜ தேவரின் 32 ஆம் ஆண்டுக் கல்வெட்டு உணர்த்துகின்றது. இவ்வூர் முதலாம் இராஜேந்திர சோழன் கல்வெட்டில், வடகரை இராஜேந்திர சிங்கவளநாட்டுப் பெரியவானவன் மாதேவி சதுர்வேதிமங்கலத்து விசயமங்கை என்றும், திரிபுவனச் சக்கரவர்த்தி மூன்றாங் குலோத்துங்கசோழன் கல்வெட்டில் விக்கிரமசோழவள நாட்டு இன்னம்பர் நாட்டு விசய மங்கை எனவும் குறிக்கப்பெற்றுள்ளது. | | பிறசெய்திகள்: | | பெரியவானவன்மாதேவி சதுர்வேதிமங்கலத்தில் சபை ஒன்று | | |
|
|