"கொள்ளிடக்கரைக் கோவந்தபுத்தூரில் வெள்ளிடைக் கருள் செய்விசயமங்கை, உள்ளிடத்து உறைகின்ற உருத்திரன் கிள்ளிடத் தலையற்றது அயனுக்கே" | |
| -தி.5ப.71பா.3 |
| என்னும் இப்பதிக்குரிய திருநாவுக்கரசரது பதிகப்பாடலால் அறியலாம். |
| இறைவரின் திருப்பெயர் விசயநாதர். இறைவியின் பெயர் மங்கைநாயகி. தீர்த்தம் அர்ச்சுனதீர்த்தம். இது கோயிலுக்கு எதிரில் இருக்கின்றது. |
| இது கும்பகோணத்திற்கு வடமேற்கில் உள்ள திரு வைகாவூர்க்கு வடக்கே கொள்ளிடப் பேராற்றின் வடகரையில் இருக்கின்றது. சுவாமி மலைக்கு மேற்கிலுள்ள அண்டக்குடி என்னும் ஊரிலிருந்தும் இவ்வூரையடையலாம். இவ்வூர்க்கு அப்பர் பதிகம் ஒன்றும் சம்பந்தர் பதிகம் ஒன்றும் ஆக இரண்டுபதிகங்கள் இருக்கின்றன. |
| கல்வெட்டு: |
| இத்திருக்கோயிலில் மதுரைகொண்ட கோப்பரகேசரிவர்மன், பரகேசரி உத்தமசோன், முதலாம் இராஜராஜ சோழன், முதலாம் இராஜேந்திரசோழன், முதற்குலோத்துங்க சோழன் மூன்றாங் குலோத்துங்க சோழன், திரிபுவனச் சக்கரவர்த்தி இராஜராஜ தேவன் இவர்கள் காலங்களில் செதுக்கப்பட்ட கல்வெட்டுக்கள் இருக்கின்றன. இக்கல்வெட்டுக்களில் இறைவர் விஜயமங்கலமுடைய மகாதேவர், விஜயமங்கலத்து மகாதேவர், விஜயமங்கலமுடைய பரமசாமி என்னும் பெயர்களால் குறிக்கப்பெற்றுள்ளனர். |
| இக்கோயில் விமானத்தைக் கல்லால் கட்டியவன்: |
| விசயமங்கலமுடைய பரமசாமிக்கு ஸ்ரீ விமானத்தைக் கல்லால் எழுந்தருளுவித்தவன் உடையார் மும்முடிச்சோழதேவர் பெருந்தரத்து குவளாலமுடையான் அம்பலவன் பழுவூர் நக்கனான விக்கிரமசோழமகாராஜன் ஆவன்.1 இச்செய்தி முதலாம் இராஜராஜ சோழனின் |
|
| 1See also the South Indian Inscriptions, Volume. XIII The Cholas, Number 76. பெருந்தரம் a nobleman. |