| 238 | தலங்களின் வரலாற்றுக் குறிப்புக்கள் | (ஐந்தாம் திருமுறை) | |
| | திருவீழிமிழலை என வழங்கியது. சுவாமி பெயர் வீழிநாதர், வீழிமிழலைநாதர் என்பன. கோயில் பிராகாரத்தில் சிலரால் பிரதிட்டை செய்யப்பெற்ற நின்றருளிய நாயனார், நெறிவார்குழலி நாச்சியார், திருவேட்டீஸ்வரமுடைய மகாதேவர், திருவேகம்பமுடையார்1, பார்வதீஸ்வரமுடையார்2, திருத்தண்டூன்றிய மகாதேவர்3 கோயில்களும் பிரதிட்டிக்கப்பெற்ற இடங்களும் குறிக்கப்பெறுகின்றன4 அம்மை, காமக்கோட்டம் உடைய நாச்சியார் என்று அழைக்கப்பெறுகிறார். திருஞானசம்பந்தருக்கும், திருநாவுக்கரசருக்கும், மாணிக்கவாசகருக்கும் தனித்தனி ஆலயங்கள் அமைந்திருந்தன. முன்னிருவருடைய மடங்களும் வடக்குவீதியில் இருந்தன என்பதும் அறியக் கிடக்கின்றன. | | ஆதித்தன் மகனாகிய முதற்பராந்தகன் காலத்திலிருந்து பதினொரு சோழமன்னர்களின் காலத்துக் கல்வெட்டுக்களும், சடாவர்மன் சுந்தரபாண்டியன், வீரபாண்டியதேவன் கல்வெட்டுக்களும் விஜயநகர பரம்பரையைச்சேர்ந்த விருப்பண்ண உடையார் கல்வெட்டு ஒன்றும், பெயரறியப்பெறாதன பதினான்குமாக அறுபத்தெட்டுக் கல்வெட்டுக்கள் உள்ளன. அவற்றுள் இராஜேந்திர சோழன் திருவீழிமிழலை வடக்கு வீதியிலுள்ள திருநாவுக்கரசர் திருமடத்திற்கு நிலம்விட்ட செய்தி அறியப்படுகிறது5. மூன்றாம் இராஜராஜன் திருவீழிமிழலைக் கோயில் மூன்றாம் பிராகாரத்தில் திருவாதவூரர் மாணிக்கவாசகர் படிமத்தைப் பிரதிஷ்டை செய்தான்6. சடாவன்மன் சுந்தரபாண்டிய தேவன் திருக்கை கொட்டித் திருப்பதியம் விண்ணப்பிக்க ஏற்பாடு செய்தான்7. முதல் இராஜராஜ சோழன் காலத்தில் ஐப்பசி ஓணத்திருவிழா தரிசனத்திற்காக வரும் அன்பர்களுக்கு அன்னம் வழங்கக் காசு அளிக்கப்பட்ட செய்தியும் இவ்விழா மிகச் சிறப்பாக நடைபெற்றமையும் அறிவிக்கும்8. முதற் குலோத்துங்கன் தமது ஆட்சி முப்பத்து நான்காம் ஆண்டில் சண்டேஸ்வரப் பிரதிஷ்டை செய்வித்து நித்திய பூசைக்கு ஏற்பாடு செய்தான்9. சிறந்த செய்தியொன்று வாணியின் பாதனான அரிகுல கேசரி விழுப்பரையனால் 'ஸ்ரீகாலகாலன்' என்னும் வாள், வீழிமிழலை நாதர்க்கு வழங்கப்பெற்றது.10 | | 11மாப்பிள்ளைச்சாமி எனப்பெறும் மணவாளத் திருக்கோலப் |
| | 1-417 of 1908, 2-418 of 1908, 3-436 of 1908, 4-392 of 1928. 5-402 of 1908, 6-409 of 1908, 7-414 of 1908, 8-422 of 1908, 9-427 of 1908, 10-438 of 1908, 11-444 of 1908. | | |
|
|